| 30 |
காட்சியைய
டைந்துளிக ளிப்புளம டங்கா
மாட்சியைய டைந்தருவ ரத்திலவர் வாய்ந்த
சூட்சியைய டைந்தடிதொ றுந்தொறுமி றைஞ்ச
வாட்சியை யடைந்தொளிய டைந்தருள டைந்தார். |
| |
காட்சியை அடைந்துளி,
களிப்பு உளம் அடங்கா
மாட்சியை அடைந்து, அரு வரத்தில், அவர், வாய்ந்த
சூட்சியை அடைந்து, அடி தொறும் தொறும் இறைஞ்ச,
ஆட்சியை அடைந்து, ஒளி அடைந்து, அருள் அடைந்தார். |
அக்காட்சியைப்
பெற்றபோது, அப்பாதலத்தார், மகிழ்ச்சி நிறைந்த
தம் உள்ளத்தில் அடங்காத மாட்சியை அடைந்து, அரிய வரத்தால் கிட்டிய
உணர்வையும் அடைந்து, அத்திருமகனின் அடியைக் கூட்டங் கூட்டமாய்
வணங்கவே, வானுலக ஆட்சியை அடைந்து, ஒளியை அடைந்து,
அருளையும் பெற்றனர்.
| 31 |
பணிந்தனர்பு
கழ்ந்தனர்ப தந்தனிலு யர்ந்தே
தணிந்தனர்த ணிந்திலந லங்களிற யங்கத்
துணிந்தனர்து ளங்கினர்து தைந்தனந யங்க
ளணிந்தனரருந்துதிய விழ்ந்தனரொ ருங்கே. |
| |
பணிந்தனர்;
புகழ்ந்தனர்; பதம் தனில் உயர்ந்தே
தணிந்தனர்; தணிந்து இல நலங்களில் தயங்கத்
துணிந்தனர்; துளங்கினர்; துதைந்தன நயங்கள்
அணிந்தனர்; அருந்துதி அவிழ்ந்தனர் ஒருங்கே. |
அவர்கள்
திருமகனை வணங்கினர்; போற்றினர்; அவன் அடிகளில்
எழுச்சியோடு விழுந்தனர்; தணியாத நலங்களால் விளங்கவே துணிவு
கொண்டனர்; ஒளியால் விளங்கினர்; தோய்ந்த இன்பங்களை அணியாகக்
கொண்டனர்; ஒருங்கே அரிய வாழ்த்துக்களால் தம் வாய் மலர்ந்தனர்.
|