பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 752

               34
உரைக்கடல்க டந்தவெழி லுண்டிலக நீயே
வரைக்கடல்க டந்ததுய ரோடுனைவ ளர்த்த
கரைக்கடல்க டந்தபய னின்றினிது கண்டேன்
புரைக்கடல்க டந்தகளி யுட்பொதுள வென்றான்.
 
"உரைக் கடல் கடந்த எழில் உண்டு இலக நீயே,
வரைக் கடல் கடந்த துயரோடு உனை வளர்த்த
கரைக் கடல் கடந்த பயன் இன்று இனிது கண்டேன்,
புரைக் கடல் கடந்த களி உள் பொதுள!" என்றான்.

     "பாவக் கடலைக் கடந்த மகிழ்ச்சி உள்ளத்தில் மிகுதலால், சொல்லின்
கடலைக் கடந்த அழகு கொண்டு நீ விளங்கவே, அளவு என்னும் கடலைக்
கடந்த துயரத்தோடு உன்னை நான் வளர்த்ததனால் பெறலாகும் கரையுள்ள
கடலையும் கடந்த பயனை இன்று இனிதே கண்டு கொண்டேன்!" என்றான்.

 
               35
என்றெழும வாவொடுவி ழுந்திருவி ழுத்தா
ளன்றெழுமு டிக்கிணைய ணிந்துதொழு சூசை
நன்றெழும றாநசைந யத்தசவை யோடு
சென்றெழும கிழ்ச்சியலை மூழ்கிநசை தீர்ந்தான்.
 
என்று, எழும் அவாவொடு விழுந்து, இரு விழுத் தாள்
அன்று எழு முடிக்கு இணை அணிந்து தொழு சூசை
நன்று எழும் அறா நசை நயத்த சவையோடு
சென்று, எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான்.

     என்று இவ்வாறு, உள்ளத்தில் எழும் ஆவலோடு தரையில் விழுந்து,
திருமகனின் சிறந்த இரு அடிகளையும் அன்று ஏழு முடிகளுக்கு
இணையாகத் தன் தலைக்கு அணிந்து கொண்டு தொழும் சூசை, நன்மைமீது
எழும் அறாத ஆசையை விரும்பிய வானவர் சபையோடு தானும் கூடிச்
சென்று, அதனால் எழும் இன்பக்கடலில் மூழ்கித் தன் ஆசை தணியப்
பெற்றான்.