| 38 |
மின்புரிய
மீனதினு மின்னொளிம லர்ந்த
வன்புரிய வன்னவர ருத்துதிக ளாடிப்
பின்புரிய வொப்புமில பேருவகை பேரா
தின்புரிய தொல்லையிலை யெல்லையிலை யன்றோ. |
| |
மின் புரிய மீன்
அதினும் மின் ஒளி, மிளிர்ந்த
அன்பு உரிய அன்னவர், அருந் துதிகள் ஆடி,
பின்பு உரிய ஒப்பும் இல பேர் உவகை பேராது,
இன்பு உரிய தொல்லை இலை; எல்லை இலை அன்றே. |
விளங்கிய
அன்புக்கு உரிய அவ்வுத்தரிப்பிடத்தார், தம்மிடத்து மின்னும் ஒளி விண்மீனைக் காட்டிலும்
சிறந்த மின்னலைப் புரிய, அரிய
புகழுரைகளைப் பேசி, அதன் பின்னும் தனக்குத் தகுந்த ஒப்பு வேறு
இல்லாத பெரு மகிழ்ச்சி நீங்காமல், தம் உரிமையாகக் கொண்ட இன்பம்
பண்டையில் இருந்ததுமில்லை; அதற்கு ஒர் அளவும் இல்லை.
கல்லறையில்
திருமகன்
-
விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா
| 39 |
அயிர்கடந்
தினிய வின்பத் தங்கணி னிருநாட் போக்கி
யுயிர்கடந் தொழிந்த யாக்கை யுறைந்தகல் லறைக்க ணெந்தஞ்
செயிர்கடந் தளித்த நாதன் செறிந்தவவ் வவையோர் நாப்பண்
வயிர்கடந் துடன்ற வோதை வழங்கவிற் பரப்பிப் போனான். |
| |
அயிர் கடந்து
இனிய இன்பத்து அங்கணின் இரு நாள் போக்கி,
உயிர் கடந்து ஒழித்த யாக்கை உறைந்த கல்லறைக் கண், எம் தம்
செயிர் கடந்து அளித்த நாதன், செறிந்த அவ் அவையோர் நாப்பண்,
வயிர் கடந்து உடன்ற ஓதை வழங்க, வில் பரப்பிப் போனான். |
|