|
நம்
பாவங்களை யெல்லாம் போக்கிக் கடந்து நம்மை மீட்டுக் காத்த
ஆண்டவன், சருக்கரையினும் மிகுந்த இனிய இன்பத்தோடு அங்கு இரண்டு
நாட்களைப் போக்கி, உயிரை விட்டொழித்த தன் உடல் தங்கியிருந்த
கல்லறையிடத்த, கொம்பொலியையும் கடந்து விரவி யெழுந்த இசைக்
கருவிகளின் ஓசை எழ, தன்னோடு செறிந்த அப்பாதலச் சபையோர் நடுவே,
சுடர் ஒளி பரப்பிப் போனான்.
| 40 |
எற்பிழம்
பெறித்த வானோ ரெண்ணிலர் முனர்ப்போய்ப் பாட
வற்பிழம் பறவில் லார்மற் றனைவரும் பினர்வந் தார்ப்பக்
கற்பிழம் புருக வின்பங் களிவளன் புடையிற் செல்லச்
செற்பிழம் புறையி னார்ந்த திருவரு ணாதன் போனான். |
| |
எல் பிழம்பு
எறித்த வானோர் எண் இலர் முனர்ப் போய்ப் பாட,
அல் பிழம்பு அற வில் ஆர் மற்று அனைவரும் பினர் வந்து ஆர்ப்ப,
கல் பிழம்பு உருக இன்பம் கனி வளன் புடையில் செல்ல.,
செல் பிழம்பு உறையின் ஆர்ந்த திரு அருள் நாதன் போனான் |
ஒளித்
திரளை வீசிய எண்ணிக்கை இல்லாத வானவர் முன்னே
பாடிக் கொண்டு போகவும், இருளின் திரள் நீங்குமாறு ஒளிச்சுடர் நிறைந்த
மற்றவர் யாவரும் பின்னே ஆரவாரம் செய்து வரவும், கல்லின் திரளும்
உருகுமாறு இன்பத்தால் கனிந்த சூசை பக்கத்தே செல்லவுமாக, மேகத்
திரள் பொழியும் மழையினும் நிறைந்த திருவருள் கொண்ட ஆண்டவன்
இடையே போனான்.
| 41 |
மெய்கிடந்
துறைந்த வங்கண் விரைவிலோர் கணத்திற் சென்று
பொய்கிடந் தமைந்த பாவம் போக்கத்த னுடனிற் பாய்ந்த
நெய்கிடந் தடைந்த காய நின்றவவ் வவைமுன் காட்டத்
துய்கிடந் துடலைப் போர்த்த துகிற்பட நீக்கினானே. |
| |
மெய் கிடந்து
உறைந்த அங்கண் விரைவில் ஓர் கணத்தில் சென்று,
பொய் கிடந்து அமைந்த பாவம் போக்க, தன் உடலில் பாய்ந்த |
|