நெய் கிடந்து
அடைந்த காயம், நின்ற அவ் அவை முன் காட்ட,
துய் கிடந்து உடலைப் போர்த்த துகில் படம் நீக்கினானே. |
தன்
உடல் அமர்ந்து தங்கிய அவ்விடத்திற்கு ஒரு நொடியில்
விரைந்து சென்றடைந்து, பொய்யில் மூழ்கிக் கிடந்து உருவான பாவங்களைப்
போக்கும் பொருட்டு., தன் உடலினின்று பாய்ந்தோடிய குருதியில் தோய்ந்து
கிடந்த வண்ணமாய் அவ்வுடலில் அடைந்த தன் காயங்களை, அங்குக் கூடி
நின்ற அச்சபையோர் முன் காட்டவென்று, தூய்மை பொருந்திய அவ்வுடலை
மூடியிருந்த துணிப் போர்வையை விலக்கினான்.
"துய்"
என்பது "தூய்" என்பதன் குறுக்கல் விகாரம்.
| 42
|
அயநலம் போர்த்த
பார்காத் தருளொடின் றுமக்குத் தந்த
நயநலங் கொள்ள நானே நல்கிய விலையி தோவென்
றியனலந் தவிர்ந்த மெய்போர்த் திடுங்கலை நீக்கி நீங்கா
வயநலம் பொலிந்த தூயோன் வாய்மலர்ந் தறைந்தான் மீண்டே. |
| |
"அய நலம் போர்த்த
பார் காத்து அருளொடு இன்று உமக்குத்தந்த
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ!" என்று,
இயல் நலம் தவிர்ந்த மெய் போர்த்திடும் கலையை நீக்கி, நீங்கா
வய நலம் பொலிந்த தூயோன், வாய் மலர்ந்து அறைந்தான் மீண்டே: |
என்றும்
நீங்காத வல்லமை நலம் பொலிந்த தூயவனாகிய திருமகன்,.
"கடல் நீரை நல்ல ஆடையாகப் போர்த்திக் கொண்டுள்ள இவ்வுலகத்தை
மீட்டுக் காத்து, இன்று கருணையோடு உமக்குத் தந்துள்ள இப்பேரின்ப
நலத்தைக் கொள்ளும் பொருட்டு, நான் தந்த விலையை இதோ பாருங்கள்!"
என்று, தனக்கு இயல்பான அழகு நலம் நீங்கிய அவ்வுடலை மூடியிருக்கும்
ஆடையை நீக்கிக் காட்டி, தன் திருவாய் மலர்ந்து மீண்டும் பின்வருமாறு
சொல்லலானான் :
|