| 47 |
தூயிரக் கொழித்த
நீசர் தூணினோ டெனைச்சேர்த் தோரை
யாயிரத் தொருநூற் றைம்முன் றடியடித் திடமொன் றின்றி
வாயிரக் கமுமற் றாய வடிவடித் தென்புந் தோன்றப்
பாயிரத் தமுமா றோடப் பழியுரு வுடலை நோக்கீர். |
| |
"தூய் இரக்கு
ஒழித்த நீசர் தூணினோடு எனைச் சேர்த்து, ஓர் ஐ -
யாயிரத்து ஒரு நூற்று ஐம் மூன்று அடி அடித்து, இடம் ஒன்று இன்றி,
வாய் இரக்கமும் அற்று, ஆய வடு அடித்து, என்பும் தோன்ற,
பாய் இரத்தமும் ஆறு ஓட, பழி உரு உடலை நோக்கீர்! |
"தூய
இரக்கத்தை நெஞ்சினின்று அறவே ஒழித்த கொடியோர், ஒரு
கற்றூணோடு என்னைச் சேர்த்துக் கட்டி, ஐயாயிரத்து நூற்றுப் பதினைந்து
அடிகள் அடித்து, மேலும் அடிக்க இடம் ஒன்றும் இல்லாமையால், எலும்பும்
வெளியே தோன்றுமாறு, முன் ஏற்பட்ட காயத்தின் மீதே மேலும் அடித்து,
இரக்கச் சொல்லும் அற்று, பாய்ந்த இரத்தமும் ஆறு போல் ஓடவே,
பழிக்கத்தக்க உருவம் கொண்டுள்ள உடலையும் பாருங்கள்!
| 48 |
படியதோர்
தனிக்கோ லோச்சிப் பாரெலாந் தாங்கு நானே
நெடியதோர் சிலுவை தாங்கி நீசருண் ணீச னென்னக்
கடியதோர் வஞ்சர் நிந்தை கான்றடித் துதைப்ப வீழ்ந்து
கொடியதோர் தடத்து யர்ந்த குன்றுமே லரிதிற் சென்றேன். |
| |
"படி அது ஓர்
தனிக்கோல் ஓச்சி, பார் எலாம் தாங்கு நானே
நெடியது ஓர் சிலுவை தாங்கி, நீசருள் நீசன் என்ன,
கடியது ஓர் வஞ்சர் நிந்தை கான்று அடித்து உதைப்ப வீழ்ந்து
கொடியது ஓர் தடத்து உயர்ந்த குன்றுமேல் அரிதின் சென்றேன். |
"இவ்வுலகத்தை
ஒரு தனிச் செங்கோல் செலுத்தி ஆண்டு,
இவ்வுலகையெல்லாம் தாங்கிக் கொண்டிருக்கும் நானே, கொடி யோருள்ளும்
மிகக் கொடியோன் என்னத்தக்கவாறு, ஒரு நெடிய சிலுவையைத் தோளிற்
சுமந்து, கடுமனங் கொண்ட வஞ்சகர் வசைகளைக் கக்கி அடித்து
|