பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 760

உதைத்தமையால் தரையில் விழுந்து, கொடியதொரு பாதை வழியாக ஓர்
உயர்ந்த மலையின் மேல் அரிதாகச் சென்று சேர்ந்தேன்.

 
                    49
ஓரயில் குன்றின் கோட்டி லுலகெலாம் வெருவிக் கூசப்
பேரயி லாணி தன்னாற் பெருமரத் தறையுண் டென்செந்
நீரயில் புவிதன் றீது நீத்தருள் கிளர்த்து வாழக்
கூரயி லாணிக் காயங் கொண்டகால் கரங்க ணோக்கீர்.
 
"ஓர் அயில் குன்றின் கோட்டில், உலகு எலாம் வெருவிக் கூச,
பேர் அயில் ஆணி தன்னால் பெரு மரத்து அறையுண்டு,
                                        என் செந்
நீர் அயில் புவி தன் தீது நீத்து அருள் கிளர்த்து வாழ,
கூர் அயில் ஆணிக் காயம் கொண்ட கால் கரங்கள் நோக்கீர்!

     "ஒரு கூர்மையான மலை உச்சியில், உலகமெல்லாம் அஞ்சிக் கூசுமாறு,
பெரிய இரும்பாணியால் அப்பெரிய சிலுவை மரத்தில் நான் அறையுண்டு,
என் இரத்தத்தைக் குடித்த பூமி தன் பாவம் தீர்க்கப் பெற்றுத் தெய்வ
அருள் நிறைந்து வாழ்வு பெறும் பொருட்டு, கூர்மையான இரும்பாணிகளின்
காயம் கொண்ட என் கால்களையும் கைகளையும் பாருங்கள்!

 
                       50
ஆட்டியா லமைந்த தீமை யகற்றியீ துயர்வீட் டாறு
காட்டியா னுயிரை நீக்கிக் கடும்பகை நீங்கா நெஞ்சா
னீட்டியால் விலாவைத் தாக்கி யடைக்கல மெவர்க்குஞ்
                                    செய்யப்
பேட்டியான் றிறந்த நெஞ்சிற் பெரியதோர் வாயி னோக்கீர்.
 
"ஆட்டியால் அமைந்த தீமை அகற்றி, மீது உயர் வீட்டு ஆறு
காட்டி யான் உயிரை நீங்கி, கடும் பகை நீங்கா நெஞ்சான்
ஈட்டியால் விலாவைத் தாக்கி, அடைக்கலம் எவர்க்கும் செய்யப்
பேட்டு யான், திறந்த நெஞ்சில் பெரியது ஓர் வாயில் நோக்கீர்!