|
"ஏவாள்
என்னும் ஒரு பெண்ணால் விளைந்த பாவத்தைப் போக்கி,
மேலே உயர்ந்த மோட்ச வீட்டிற்கு வழியைக் காட்டி நான் உயிரையே
போக்கிய பின்னரும், கடும் பகை நீங்காத நெஞ்சம் கொண்ட ஒருவன்
ஈட்டியால் என் விலாவைக் குத்த, நான் யாவர்க்கும் அடைக்கலம் அருள
விரும்பி, அதற்கென என் திறந்த நெஞ்சில் பெரியதொரு வாயில்
இருப்பதையும் பாருங்கள்!
பேட்டு
+ யான் - பேட்டி யான், இங்குப் 'பெட்டு' என்ற சொல்
எதுகைப் பொருட்டு, 'பேட்டு' என நீட்டல் விகாரம் கொண்டது.
| 51 |
பெய்ததோர்
மாரி யென்னப் பெருகியென் னிரத்தஞ் சிந்திக்
கொய்ததோர் கனியாற் கொண்ட குறைகடீர்த் துலகங் காக்கச்
செய்ததோர் வினையீ தென்னாற் செய்வது மினியா துண்டோ
வெய்தவோர் பயனு மும்மா லெனக்குண்டோ வென்றா னாதன். |
| |
"பெய்தது ஓர்
மாரி என்னப் பெருகி, என் இரத்தம், சிந்தி,
கொய்தது ஓர் கனியால் கொண்ட குறைகள் தீர்த்து உலகம் காக்க
செய்தது ஓர் வினை ஈது! என்னால் செய்வதும் இனியாது உண்டோ?
எய்த ஓர் பயனும் உம்மால் எனக்கு உண்டோ?" என்றான் நாதன். |
"என்
இரத்தம் பெய்த ஒரு மழை போலப் பெருகச் சிந்தி, ஏவாள்
பறித்துத் தின்ற ஒரு கனியால் இவ்வுலகம் கொண்ட பாவக் குறைகளைத்
தீர்த்து அதனை மீட்டுக் காக்கும் பொருட்டு, நான் செய்த ஒப்பற்ற செயல்
இது! இதற்கு மேலும் என்னால் செய்யப்பட வேண்டியதும் ஏதேனும்
உண்டோ? எனக்கு இதன் மூலம் உங்களால் வரக் கூடுமான பயனும் ஒன்று
உண்டோ?" என்று ஆண்டவன் கூறி முடித்தான்.
சூசையின்
வருத்தம்
| 52 |
உருகமா வயிரக்
குன்று முரைத்தசொல் லெறிவேல் பாய்ந்து
திருகவாய் பிளந்த புண்ணுட் டிரண்டதீ யாக வாவி
பருகநோ யாற்றாச் சூசை பரிவள வழுந்துந் துன்பம்
பெருகவோ வாற்ற வோவோர் பேருயிர்ப் புயிர்த்துச் சொன்னான்.
|
|