உருக மா வயிரக்
குன்றும் உரைத்த சொல், ஏறி வேல் பாய்ந்து
திருக வாய் பிளந்த புண்ணுள் திரண்ட தீயாக ஆவி
பருக, நோய் ஆற்றாச் சூசை, பரிவு அளவு அழுந்தும் துன்பம்
பெருகவோ ஆற்றவோ, ஓர் பேர் உயிர்ப்பு உயிர்த்துச் சொன்னான் : |
பெரிய
வைர மலையும் உருகுமாறு திருமகன் கூறிய இச்சொல், எறிந்த
வேல் பாய்ந்து, அதனைத் திருகி எடுத்ததனால் வாய் பிளந்த
புண்ணினுள்ளே இட்ட திரண்ட தீயைப் போல் தன் உயிரைப் பருகவும்,
அத்துன்பம் பொறுக்க மாட்டாத சூசை, தன் அன்பின் அளவிற்கேற்ப
அழுந்தும் அத்துன்பம் பெருகவோ தணியவோ என்று கூற இயலாதவாறு,
ஒரு பெரு மூச்சு விட்டு, பின்வருமாறு சொல்லலானான்.
| 53 |
இன்றுநீ யுலகங்
கூச வித்துயர் படவோ வஞ்சி
யன்றுநா னெசித்து நாட்டை யடைந்துநின் னுயிரைக் காத்தேன்
பொன்றுநீ மரத்திற் செந்நீர்ப் புணரியாழ்ந் திடவோ வீட்டைச்
சென்றுநா னுவப்பில் வாழ்வேன் றேவரு டிருவி னல்லோய். |
| |
"இன்று நீ உலகம்
கூச இத் துயர் படவோ, அஞ்சி
அன்று நான் எசித்து நாட்டை அடைந்து, நின் உயிரைக் காத்தேன்!
பொன்றும் நீ. மரத்தில் செந்நீர்ப் புணரி ஆழ்ந்திடவோ, வீட்டைச்
சென்று நான் உவப்பில் வாழ்வேன், தே அருள் திருவின் நல்லோய்! |
"தேவ அருளையே செல்வமாகக் கொண்டுள்ள நல்லவனே! இன்று
நீ உலகமெல்லாம் கூசுமாறு இந்தத் துன்பங்களை யெல்லாம்
அனுபவிப்பதற்கென்றோ, அன்று நான் எசித்து நாட்டை அடைந்து, உன்
உயிரைக் காப்பாற்றினேன்! அவ்வாறு இறக்கும் நீயும், சிலுவை மரத்தில்
இரத்தக் கடலில் மூழ்கிடுவதனாலேயா மோட்ச வீட்டை அடைந்து
மகிழ்ச்சியோடு வாழ்வேன்!.
|