| 54 |
அருள்மிக
விறத்தல் வேண்டி னத்திறத் துயரோ வேண்டு
மருள்மிக வசட ருன்னை மறைத் திறத்தல் வேண்டின்
பொருள்மிக வுன்றோ ளென்றோள் பொருந்தியோர் மரத்திற்
றூங்கு
யிருள்மிக முகில்சூழ் குன்றத் திருவர்வீ தலும்வேண் டாதேன். |
| |
"அருள் மிக இறத்தல்
வேண்டின், அத்திறத் துயரோ வேண்டும்?
மருள்மிக அசடர் உன்னை மரத்து அறைந்து இறத்தல் வேண்டின்,
பொருள் மிக., உன்தோள் என்தோள் பொருந்தி, ஓர் மரத்தில்
தூங்கி,
இருள் மிக. முகில் சூழ் குன்றத்து, இருவர் வீதலும் வேண்டாது
ஏன்?
|
"மக்கள்மீது
கொண்ட கருணை மிகுதியால் நீ உயிர் துறத்தல்
வேண்டுமாயினும், அவ்வாறான துயரம் கொண்டோ இறத்தல் வேண்டும்?
மயக்க மிகுதியால் தீயோர் உன்னை மரத்தில் அறைந்தே நீ இறத்தல் வேண்டுமென்றிருப்பின்,
இருள் மிகுமாறு மேகம் சூழும் ஒரு மலையில், நம்
உறவிற்குப் பொருட் பொருத்தம் மிகுமாறு, உனது தோளும் எனது தோளும்
ஒன்றாகப் பொருந்தி, ஒரே சிலுவை மரத்தில் தொங்கி, இருவரும் ஒன்றாக
இறத்தல் நீ விரும்பிச் செய்யாதது ஏன்?
'வேண்டாதது
ஏன்' என்பது 'வேண்டாது ஏன்' எனத் தொகுத்தல்
விகாரம் பெற்றது. சூசையின் இதே விருப்பம் 31 : 30 காண்க.
| 55 |
பிறந்துயிர்
பிழைத்தபோது பெயர்கிலாத் துணையென்
றானே
னிறந்துயி ரளித்த போது மென்னையுந் துணைவேண்
டாதேன்
சிறந்துயி ரனைத்துங் காத்த திருமருந் தன்னோ யென்ன
மறந்துயி ரளிப்ப நொந்தான் வளன்விட வுடலுண் டானால். |
| |
"பிறந்து உயிர்
பிழைத்த போது, பெயர்கு இலாத் துணை என்று ஆனேன்
இறந்து உயிர் அளித்த போதும் என்னையும் துணை வேண்டாது ஏன்? |
|