சிறந்து உயிர்
அனைத்தும் காத்த திருமருந்து அன்னோய்!" என்ன
மறந்து உயிர் அளிப்ப நொந்தான், வளன், விட உடல் உண்டு
ஆனால். |
"சிறந்த
முறையிலே உயிர்கள் அனைத்தையும் காத்த திரு அமுதம்
போன்றவனே! நீ உலகில் பிறந்து உயிர் வாழ்ந்திருந்த போது, நீங்க
முடியாத துணையாக நான் அமைந்திருந்தேன்; நீ இறந்து உயிரைக்
கொடுத்த போதும் என்னையும் துணையாக வேண்டாதது ஏன்?" என்று
சூசை சொல்லி, அப்பொழுது விடுவதற் கென்று தனக்கு உடல்
இருந்ததாயின், தன்னை மறந்து அவ்வுயிரைத் தந்து இறப்பதற்கொத்த
தன்மையாய் வருந்தினான்.
பாதலத்தோர்
பரிவு
தேமா,
- மா, கூவிளம், தேமா, புளிமாங்காய்
| 56 |
விண்டார்
பைம்பூ வாகைய னிவ்வாய் மெலிவெய்த
மண்டார் துன்பத் தாழுடல் கொண்ட வடுவெல்லாங்
கண்டா ராய்ந்தார் கண்டுளி யாருங் கலுழ்கின்றா
ருண்டா ருன்னாப் பீழைகள் மீட்டோ ருரையுற்றார். |
| |
|
விண்டு ஆர்
பைம் பூ வாகையன் இவ்ஆய் மெலிவு எய்த,
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம்
கண்டு ஆராய்ந்தார்; கண்டுளி யாரும் கலுழ்கின்றார்;
உண்டார் உன்னாப் பீழைகள்; மீட்டு ஓர் உரை உற்றார் :
|
விரிந்து
நிறைந்த பசுமையான மலர்க் கொடியைக் கொண்ட சூசை
இவ்விதமாய் வருந்தி மெலியவும், செறிந்து நிறைந்த துன்பத்தில் ஆழ்ந்த
திருமகனின் உடல் பெற்ற காயங்களையெல்லாம் அப்பாதலத்தோர் கண்டு
ஆராய்ந்தனர்; ஆராய்ந்து கண்டவிடத்து அனைவரும் அழுகின்றனர்;
கருதுதற்கரிய துன்பங்களையும் அனுபவித்தனர்; மீண்டும் இவ்வாறு ஓர்
உரை சொல்லலாயினர் :
|