| 57 |
ஐயா விவ்வா
றெங்கள்பொ ருட்டா லயர்வுற்றாய்
மெய்யார் துன்பத் தொன்றென வுன்பால் விளைவுண்டோ
மையார் பெட்பா றீவினை செய்த மனுவெல்லா
முய்யா ரென்றன் றோவுயிர் சிந்த வுணர்வுற்றாய். |
| |
"ஐயா, இவ்வாறு
எங்கள் பொருட்டால் அயர்வு உற்றாய்!
மெய் ஆர் துன்பத்து ஒன்று என, உன் பால் விளைவு உண்டோ?
மை ஆர் பெட்பால் தீ வினை செய்த மனு எல்லாம்,
உய்யார் என்று அன்றோ, உயிர் சிந்த உணர்வு உற்றாய்! |
"ஐயா,
இவ்வாறு எங்களுக்காக நீ வருந்தித் தளர்வு கொண்டாய்!
அல்லாமல், உன் உடலில் நிறைந்துள்ள துன்பங்களில் ஒன்றையேனும் நீ
அனுபவிக்கத் தக்கதாக, உன்னிடத்துத் தீமை ஒன்றேனும் விளைவதற்குக்
காரணம் ஒன்றேனும் உண்டோ? மயக்கம் நிறைந்த ஆசைக்கு ஆளாகித்
தீவினை செய்த மனிதர் யாவரும், வேறு விதமாய் மீட்பு அடையாரென்று
கருதியன்றோ, உன் உயிரை இழக்கத் துணிந்தாய்!
| 58 |
கோன்பா
னின்பா லென்றெதி ரின்றிக் குறையின்றி
வான்பா னின்றோ யெங்கணு நின்றோய் மகிழ்கின்றா
யூன்பா னின்றோர் மேனியெ டுத்தா யுயிர்சிந்தத்
தேன்பா னின்றோ ரின்பம தென்றாய் திருவல்லோய். |
| |
|
"கோன் பால்
நின் பால் என்று, எதிர் இன்றி, குறை இன்றி,
வான் பால் நின்றோய்! எங்கணும் நின்றோய்! மகிழ்கின்றாய்!
ஊன் பால் நின்று ஓர் மேனி எடுத்தாய்! உயிர் சிந்த,
தேன் பால் நின்று ஓர் இன்பம் அது என்றாய், திரு வல்லோய்!
|
"செல்வமாக
வல்லமையைக் கொண்டுள்ளவனே! அரசு என்னும்
தன்மை உன்னையே சார்ந்ததென்ற விதமாய், எதிரான அரசென்று
ஒன்றுமின்றியும், குறை ஒன்றுமின்றியும், வானுலகில் நிலைகொண்டவனே!
அவ்வாறே எங்கும் நிலைகொண்டவனே! நிறைவான மகிழ்ச்சி
கொண்டுள்ளவனே! இத்தகைய நீயே, ஊனுக்குள் அமைந்து நின்ற
தன்மையாய் ஒர் உடலை எடுத்துக் கொண்டாய்! அவ்வுடலில் நின்ற
|