பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 766

உயிரைப் போக்கவும் அமைந்து, அதுவே தேனினும் பாலினும் கடந்து
நின்றதோர் இன்பம் என்று கொண்டாய்!

 
                 59
வாரா யோவெம் மேலுமி ரங்கி மனுவல்லற்
பாரா யோவெம் பேயினம் வென்றே பகையெல்லாந்
தீரா யோவென் றோநசை யின்மேற் சிறைதீர்த்தாய்
தாரா யோவின் றுன்றயை யேத்தத் தகவன்றோ.
 
"'வாராயோ எம் மேலும் இரங்கி? மனு அல்லல்
பாராயோ? வெம் பேய் இனம் வென்றே பகை எல்லாம்
தீராயோ?' என்றோம்; நசையின் மேல் சிறை தீர்த்தாய்!
தாராயோ இன்று உன் தயை ஏத்தத் தகவு அன்றோ?


     "நாங்கள், 'எங்கள் மேலும் இரங்கி மீட்பு வழங்க வரமாட்டாயோ?
மனிதரின் துன்பங்களைப் பார்க்க மாட்டாயோ? கொடிய பேய்க் கூட்டத்தை
வென்று பாவப் பகையெல்லாம் தீர்க்க மாட்டாயோ? என்றெல்லாம்
வேண்டினோம்; எங்கள் ஆசைக்கும் மேலாக எங்கள் பாதலச் சிறையும்
தீர்த்து வைத்தாய்! அதனால் இன்று உன் தயவை நாங்கள் போற்றுவதற்கு
வேண்டிய தகுதியை எங்களுக்குத் தரமாட்டாயோ?

 
                   60
விண்மேல் வைத்த நன்றிவ றாநாம் வினைசெய்ய
மண்மேல் வைத்த காவனி னக்கே வரைவின்றிப்
புண்மேல் வைத்த தீநிகர் துன்பம் புகுவித்தோ
மெண்மேல் வைத்த வெஞ்செயி ராரா ரிணைசொல்வார்.
 

"விண் மேல் வைத்த நன்று இவறா, நாம் வினை செய்ய,
மண் மேல் வைத்த காவல் நினக்கே, வரைவு இன்றி,
புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம், புகுவித்தோம்;
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர் ஆர் இணை சொல்வார்!

 

     "வானுலகில் எங்களுக்கென்று நீ சேர்த்து வைத்துள்ள நன்மையையும்
விடாது பற்றிக் கொள்ளாமல், நாங்கள் பாவ வினைகளைச் செய்யவே, இம்
மண்ணுலகின்மீது சார்ந்துள்ள காவலை மேற்கொண்டுள்ள உனக்கே,
புண்ணின் மேல் இட்ட நெருப்புக்கு நிகரான துன்பங்களை எல்லையின்றி
விளைவித்தவராவோம்; எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட எங்கள்