| 18 |
செண்பக
மலர்ந்தகாத் திரளும் பொய்கையும்
வண்பக டுழைத்தபூம் வயலு நாடுந்தம்
பண்பக விசையொடப் படிக டந்துபோய்
விண்பக லவனென வெற்பி னேறினார். |
| |
செண்பகம் மலர்ந்த
காத் திரளும், பொய்கையும்,
வண் பகடு உழைத்த பூம் வயலும், நாடும் தம்
பண்பு அக விசையொடு அப்படி கடந்து போய்,
விண் பகலவன் என வெற்பின் ஏறினார். |
அவ்விருவரும்
செண்பகம் பூத்துக் கிடந்த பல சோலைகளையும்
தடாகங்களையும், வளமான எருமைக் கடாக்கள் உழுது உழைத்து நின்ற
அழகிய வயல்களையும், நாட்டுப்புறங்களையும் தன் பண்புள்ள மனத்தின்
வேகத்தோடு அவ்வாறு கடந்து போய், வானத்தில் உதிக்கும் ஞாயிறு
போல் ஒரு மலைமீது ஏறினர்.
| 19 |
கண்புதைத்
தனவிருள் கலந்த சோலைசூழ்
மண்புதைத் தனமணி வளர்குன் றுச்சிமே
னண்புதைத் தனநசைச் சிறைந லங்கொடு
விண்புதைத் தனமினின் விரைவுற் றேறினார். |
| |
கண் புதைத்து
அன இருள் கலந்த சோலை சூழ்
மண் புதைத்து அன மணி வளர்குன்று உச்சிமேல்
நண்பு உதைத்து அன நசைச் சிறை நலம் கொடு,
விண் புதைத்து அன மினின் விரைவுற்று ஏறினார். |
அம்மலை
கண்ணை மூடி மறைத்தது போன்ற இருள் கலந்த
சோலைகளாற் சூழப்பட்டது; மண்ணை மூடி மறைத்தது போன்ற மணிகள்
வளர்வது. இருவரும் அன்பினால் உந்தப்பட்டது போன்ற ஆசை என்னும்
சிறகின் நலத்தோடு, வானத்தை மூடி மறைத்தது போன்ற மின்னலைப்போல
வேகங் கொண்டு அம்மலையின் உச்சியில் ஏறினர்.
புதைத்தன
- புதைத்தது அன - 'புதைத்ததன' என்று வர வேண்டிய
தொடரின் தொகுத்தல் விகாரம். அன - 'அன்ன' என்பதன் இடைக்குறை.
மினின் - 'மின்னின்' என்பதன் இடைக்குறை.
|