67 |
நன்றாய்க்
கற்றோ நின்றயை நாஞ்செய் நவைகற்றோம்
பொன்றா யெம்மாற் பொன்றினை யெந்தம் புரையெல்லாம்
வென்றாய் வென்றாய் நின்னருள் மிக்காய்ப் பெரிதன்றோ
வென்றா ருள்ளத் தோவியி றைஞ்சி யெதிர்வீழ்ந்தார். |
|
"நன்றாய்க்
கற்றோம் நின் தயை;நாம் செய் நவை கற்றோம்.
பொன்றாய், எம்மால் பொன்றினை; எம் தம் புரை எல்லாம்
வென்றாய், வென்றாய்; நின் அருள் மிக்காய்ப் பெரிது அன்றோ!"
என்றார்; உள்ளத்து ஓவி, இறைஞ்சி எதிர் வீழ்ந்தார். |
"நீயே
கற்றுத் தர, உன் தயவு எத்தகையதென்று நன்றாய்க் கற்றுக்
கொண்டோம்; நாங்கள் செய்த பாவத்தின் தன்மையையும் கற்றுக்
கொண்டோம். இறப்பே இல்லாத நீ, எங்கள் பொருட்டு இறந்தாய்; அதன்
மூலம், எங்கள் பாவங்களையெல்லாம் போக்கி வென்று, வெற்றி
கொண்டுள்ளாய்; உனது அருள் மிகவே பெரிதன்றோ!" என்று
அப்பாதலத்தவர் கூறினர். தன் மனத்தே மிகவும் வருந்தி, தொழுது எதிரே
வீழ்ந்தனர்.
திருமகனும்
சூசையும் உயிர்த்தெழுகை
-
மா, கூவிளம், - விளம், - விளம், - மா
68 |
வாள ழுந்திய
வருத்தமே கண்டுயிர் புகழுந்
நாள ழுந்திய நவைவடு நீத்தெழுந் திறைவன்
கோள ழுந்திய கொள்கையின் விலாவினோ டிருகை
தாள ழுந்திய காயமைந் தொளிவிடத் தரித்தான். |
|
வாள் அழுந்திய
வருத்தமே கண்டு, உயிர் புக, முந்
நாள் அழுந்திய நவை வடு நீத்து எழுந்து, இறைவன்,
கோள் அழுந்திய கொள்கையின், விலாவினோடு இரு கை
தாள் அழுந்திய காயம் ஐந்து, ஒளி விடத் தரித்தான். |
ஆண்டவனாகிய
திருமகன், அப்பாதலத்தாரின் வாள் அழுந்தினாற்
போன்ற வருத்தத்தைக் கண்டு, தன் உடலினுள் உயிர் புகவே, மூன்று
நாட்களாய் அவ்வுடலில் பதிந்து கிடந்த துன்ப வடுக்களையெல்லாம்
|