72 |
போற்றி
னானிணை போக்கிய புகழ்பொழி மாரி
தூற்றி னான்மதுத் தூற்றிய பூங்கொடி யடிமே
லேற்றி னானடி யேற்றுபு தழுவினா னாசை
யாற்றி னானரி தமரரும் வியப்பவன் பாற்றான். |
|
போற்றினான்;இணை
போக்கிய புகழ் பொழி மாரி
தூற்றினான்; மதுத் தூற்றிய பூங்கொடி அடிமேல்
ஏற்றினான்; அடி ஏற்றுபு தழுவினான்; ஆசை
ஆற்றினான், அரிது அமரரும் வியப்ப, அன்பு ஆற்றான். |
வானவரும்
இக்காட்சி அரியதென்று வியக்குமாறு, அன்பு என்றும்
தணியாத சூசை, திருமகனைப் போற்றினான்; ஒப்பெல்லாம் கடந்த புகழைப்
பொழியும் சொல் மழையைப் பொழிந்தான்; தேனைத் பொழிந்த
மலர்க்கொடியை அவன் அடியில் இட்டான்; அவ்வடியைப்தன் தலைமீது
ஏற்றி வைத்துத் தழுவினான்; அவ்வாறு தன் ஆசை தணியப் பெற்றான்.
'ஏற்றுபு'
என்பது 'செய்பு' என்ற வாய்பாட்டு இறந்த கால
வினையெச்சம்.
73 |
கான ரும்பின
கைக்கொடி யரும்பின மலர்பூத்
தேன ரும்பின செறிந்தமற் றருந்தவர் சூழ
வான ரும்பின வடிவுமீ னொத்தனர் வயங்கு
மீன ரும்பின விண்ணவர் விழாவணி விளைத்தார். |
|
கான் அரும்பின
கைக்கொடி அரும்பின மலர்பூ
தேன் அரும்பின. செறிந்த மற்று அருந் தவர் சூழ,
வான் அரும்பின வடிவு மீன் ஒத்தனர். வயங்கு
மீன் அரும்பின விண்ணவர் விழா அணி விளைத்தார். |
மணம்
தோற்றுவித்த சூசையின் கைக்கொடியில் அரும்பி மலர்ந்த
பூக்கள் தேன் அரும்பி நின்றன. செறிந்து நின்ற மற்ற அரிய தவத்தோர்
சூழ நின்று, வானில் தோன்றிய விண்மீன் பரப்பினை ஒத்து விளங்கினர்.
ஒளி விளங்கும் விண்மீன்போல் தோன்றிய வானவர் விழாக்கோலம்
கொண்டார்.
|