உயிர்த்தெழுந்த
திருமகன் மகிமை
கருவிளம்,
கருவிளம், கருவிளம், கருவிளம், கூவிளம், தேமா, புளிமா,
புளிமா
74 |
மொடமொட
வெனவின முரசொலி முழவொலி
மோதிய
யாவு முழங்கி யதிர
நெடநெட வெனவுள குழலிசை கலவிசை
நீரிய
வோதை கலந்து கனியப்
படபட வெனமழை யிடியொலி கடலொலி
பாடென
நேரி லொழிந்து மடிய
விடவிட வெனவெளி யுலகலை யுலகிடை
வீரிய
வோதை மயங்கி யெழுமால். |
|
மொடமொட என,
இனமுரசு ஒலி முழவு ஒலி மோதிய யாவும்
முழங்கி
அ திர
நெடநெட எனஉள குழல் இசை கல இசை நீரிய ஓதை கலந்து
கனிய,
படபட என மழை இடி ஒலி கடல் ஒலி பாடு என நேரில்
ஒழிந்து
மடிய,
விடவிட என வெளி உலகு அலை உலகிடை வீரிய ஓதை
மயங்கி
எழும் ஆல். |
மொடமொடவென்று,
பலவகை முரசுகளின் ஒலியும் பறைகளின்
ஒலியுமாக, அடிக்கப்பட்ட வாச்சியங்கள் யாவும் அதிர்ந்து முழங்கவும்,
நெடநெடவென்று, கைகளிற் கொண்டுள்ள குழல்களின் பாடலும்
வீணைகளின் பாடலுமாக, நல்லியல்பு வாய்ந்த இசைக் கருவிகளின் ஓசை
கலந்து இனிமையூட்டவுமாக, படபடவென்று மேகத்திற் பிறக்கும்
இடியொலியும் கடல் அலையொலியும் தம் பெருமை இவற்றின் நேரே
ஒழிந்து மடியுமாறு, விடவிடவென்று, வெளி சூழ்ந்த வானுலகிலும் கடல்
சூழ்ந்த மண்ணுலகிலும் வீரம் சிறந்த ஓசையாக மயங்கி எழும்.
'விடவிட'
என்பது உருக் குறிப்பும் 'மொடமொட' போன்றவை ஒலிக்
குறிப்பும் ஆகும்.
|