பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 775

               75
விளையொளி யுருவுறி யணியணி யமரர்கள்
     வீரிய ராக மிடைந்த தொருபால்
திளையொளி மணியணி யணிமுடி கொணர்வன
     சேடிய ராக மலிந்த தொருபால்
கிளையொளி வடிவடி மலரிணை தலைமிசை
     கேழணி யாக வணிந்த தொருபா
லிளையொளி யுருவொடு புகழிசை யொலியெழ
     வீரணி யாக மகிழ்ந்த தொருபால்.
 
விளை ஒளி உரு உறி, அணி அணி அமரர்கள் வீரியராக மிடைந்தது
                                   ஒரு பால்;
திளை ஒளி மணி அணி அணி முடி கொணர்வன சேடியராக
                                   மலிந்தது ஒரு பால்;
கிளை ஒளி வடிவு அடி மலர் இணை தலைமிசை கேழ் அணியாக
                                   அணிந்தது ஒரு பால்;
கிளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ, ஈர் அணியாக
                                   மகிழ்ந்தது ஒரு பால்

     அவ்வானவரிடையே, ஒளி விளைவிக்கும் உருவங் கொண்டு,
வானவர்கள் அணிஅணியாக படை வீரராகச் செறிந்து நின்ற குழு ஒரு
பக்கம்; ஒளி மிகுந்த மணிகள் பதித்த அழகிய முடிகளைக் கொணரும்
தோழியர் போல நிறைந்து நின்ற குழு இன்னொரு பக்கம்; ஒளி கிளைக்கும்
அழகிய வடிவங் கொண்ட திருமகனின் கால்களாகிய இரண்டு மலர்களையும்
தம் தலைமீது அழகிய அணிகலனாகக் கொண்டு நின்ற குழு மற்றொரு
பக்கம்; மெல்லிய ஒளி வடிவமாகப் புகழ்ப் பாடல்களின் ஒலி எழுப்பி,
இரண்டு அணிகளாக மகிழ்ச்சியோடு நின்ற குழு வேறொரு பக்கம்.

 
              76
துளிவரு மழையென நிறைவரு மதுமழை
     தூவிய மாலை நிறைந்த தொருபா
லளிவரு முறையென வளிவரு கவரிக
     ளாடிய மாலை யமைந்த தொருபா
லொளிவரு மதியென வுயர்வரு கவிகைக
     ளூரொளி மாலை யொசிந்த தொருபால்
களிவரு மிஞிறெனக் கனைவரு கனிவன
     காமர மாலை யிடங்க டொறுமே.