பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 776

துளி வரு மழை என, நிறை வரு மது மழை தூவிய மாலை நிறைந்தது
                                          ஒரு பால்.
அளி வரு முறை என வளி வரு கவரிகள் ஆடிய மாலை அமைந்தது
                                          ஒரு பால்.
ஒளி வரு மதி என, உயர் வரு கவிகைகள் ஊர் ஒளி மாலை ஒசிந்தது
                                          ஒரு பால்.
களி வரு மிஞிறு என, கனை வரு கனிவன காமர மாலை இடங்கள்
                                         தொறுமே.


     துளியைப் பொழியும் மழை போல, நிறைந்து வரும் தேனை
மழையாகத் தூவிய மாலைகள் நிரம்பியது ஒரு பக்கம். கருணை பொழியும்
தன்மை போல், காற்று வருவதற்குரிய வெண்சாமரைகள் அசைந்தாடிய
வரிசை அமைந்தது ஒரு பக்கம். ஒளி நிறைந்து வரும் திங்கள் போல,
நிமிர்ந்து வரும் குடைகளினின்று பிறக்கும் ஒளி வரிசை ஒடுங்கித்
தோன்றியது மற்றொரு பக்கம். தேனை உண்டு களித்த வண்டுகள் போல,
ஓசை மிக்க கனிவான இசைப் பாடல்களின் வரிசையோ இடந்தோறும்
இடம்பெற்று நின்றது.

 
             77
ஒருவரு முளபல வுலகுள வதிபதி
     யூழுள வூழி னறைந்து புகழ்வா
ரொருவரு மினைவன நினைவவ னுடலுட
     னோர்மக னாக வியைந்த தறைவா
ரொருவரு மடிபட மிதிபட வுயிர்பட
     வோவிய காதை வியந்து மொழிவா
ரொருவரு மிரவியி னொளிமிக விவனெழு
     மோரையி னோகை நவின்று தொழுவார்.
 
ஒருவரும், உள பல உலகு உள அதிபதி ஊழ் உள ஊழின்
                         அறைந்துபுகழ்வார்.
ஒருவரும், இனைவன நினைவு அவன் உடலுடன் ஓர் மகன்
                         ஆக இயைந்தது அறைவார்.
ஒருவரும், அடி பட மிதி பட உயிர் உட ஓவிய காதை வியந்து
                         மொழிவார்.
ஒருவரும், இரவியின் ஒளி மிக இவன் எழும் ஓரையின் ஓகை
                         நவின்று தொழுவார்.