பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 779

               80
மெலிவன வுயிருணு மயர்வஞர் சிலுகிடர்
     பாசறை யாவு மொழிந்து மறைய
நலிவன வுடலுணு மிடிபசி மடிபிணி
     யாகுலம் யாவு மகன்று பெயர
மலிவன பகையொடு பழிமலி வெறியின
     மாறில மாயை மடிந்து சிதையப்
பொலிவன பலநல மருகுவ வொளியொடு
     பூதல மீதி லெழுந்த திறையே.
 

மெலிவன உயிர் உணும் அயர்வு அஞர் சிலுகு இடர் பாசறை யாவும்
                                   ஒழிந்து மறைய,
நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி ஆகுலம் யாவும் அகன்று
                                   பெயர,
மலிவன பகையொடு பழி மலி வெறி இன மாறு இல மாயை மடிந்து
                                   சிதைய,
பொலிவன பல நலம் மருகுவ, ஒளியொடு பூதல மீதில் எழுந்தது
                                   இறையே.


     மெலியும் உயிரை வதைத்து உண்ணும் சோர்வு வருத்தம் தொல்லை
துன்பம் நோவு போன்ற யாவும் மறைந்தொழியவும், வாடும் உடலை
வதைத்து உண்ணும் வறுமை பசி சோம்பல் நோய் துயரம் யாவும் நீங்கி
அகலவும், மலிந்த பகையோடு பழி நிறைந்த பேய்க் கூட்டத்தின் மாறாத
மாயங்கள் சிதைந்து ஒழியவும். பொலிவோடு விளங்கும் நலங்கள் பலவும்
பொருந்தவுமாக, ஆண்டவன் ஒளியோடு இவ்வுலகில் உயிர்த்தெழுந்தான்.

     'அஞர்' முதல் 'பாசறை' ஈறாக வந்த பல சொற்களும் 'துன்பம்' என்ற
ஒரே பொருளைக் குறிப்பன, மருவ' என்பது, செய்யுளோசைப் பொருட்டு
'மருகுவ' என நின்றது.

                   மரியாளுக்குக் காட்சி

     - விளம், - மா, - மா, - காய்

 
               81
வானக முதலெவ் வுலகும் வாழ்ந்துவப்ப
மீனக வுருவுற் றெழுந்த மெய்த்திறலோன்
றேனக மொழியா டன்னைச் சீர்த்துயிர்த்தா
டானக மற்றச் சவையோ டாங்கெழுந்தான்.