5 |
எல்லின்
வேந்தகன் றாமிரு ளீர்த்தவி
ரல்லின் வேந்தென நாமகன் றாகுலம்
புல்லின் யாவரும் போற்றுதி நீயெனாச்
சொல்லி னாசிதந் தோர்வரை துன்னினார். |
|
"எல்லின் வேந்து
அகன்று ஆம் இருள் ஈர்த்து அவிர்
அல்லின் வேந்து என, நாம் அகன்று ஆகுலம்
புல்லின், யாவரும் போற்றுதி நீ" எனாச்
சொல்லின் ஆசி தந்து, ஓர் வரை துன்னினார். |
"பகலின்
மன்னனாகிய பகலவன் மறைவதனால் உண்டாகும் இருளை
அறுத்து ஒளிதரும் இரவின் மன்னனாகிய விண்மதி போல், நாங்கள்
இவ்வுலகை விட்டு நீங்குவதனால் ஏதேனும் துயரம் ஏற்படுமாயின், நீயே
இங்கிருந்து யாவரையும் பேணுவாய்" என்று அவ்விருவரும் மரியாளுக்குச்
சொல்லி, ஆசியும் வழங்கி, மூவருமாக ஒரு மலையை அடைந்தனர்.
6
|
களிய ழுந்திய
காட்சியு ளோர்களு
மொளிய ழுந்திய வும்பரு முன்புறத்
தெளிய ழுந்திய சீடரும் பின்வர
வெளிய ழுந்திய வெற்பினைத் துன்னினார். |
|
களி அழுந்திய
காட்சி உளோர்களும்
ஒளி
அழுந்திய உம்பரும் முன்பு உற,
தெளி அழுந்திய சீடரும் பின்வர,
வெளி அழுந்திய வெற்பினைத் துன்னினார். |
களிப்பில்
மூழ்கிய தெய்வக் காட்சியை அடைந்துள்ள பாதலத்தோரும்
ஒளியில் மூழ்கிய வானவரும் தமக்கு முன்னே செல்லவும், தெளிவில்
மூழ்கிய சீடர் பின்னே வரவுமாக, மூவரும் வெளியான ஒரிடத்திற்
பொருந்திக் கிடந்த அம்மலையை அடைந்தனர்.
இறந்ததனால்
மனம் உடைந்திருந்த சீடர், உயிர்த்தெழுந்ததனால்
திருமகனை இறைவன் எனக் கண்டு தெளிந்தனர் என்க.
|