7 |
விரைகி டந்தவெற்
பேறிவிண் வேந்தனுங்
கரைக டந்தக டற்கடந் தின்புற
நிரைகி டந்தன ராகுல நீத்தறச்
சுரைகி டந்தசொல் லாசிதந் தானரோ. |
|
விரை கிடந்த
வெற்பு ஏறி, விண் வேந்தனும்
கரை கடந்த கடல் கடந்து இன்பு உற,
நிரை கிடந்தனர், ஆகுலம நீத்து அற,
சுரை கிடந்த சொல் ஆசி தந்தான் அரோ. |
விண்ணுலக
அரசனாகிய திருமகன், மணம் நிறைந்து கிடந்த
அம்மலைமீது ஏறி, அங்கு அணியாக நின்றுகொண்டிருந்த பிறர், கரைக்குள்
அடங்காத கடலையும் கடந்த இன்பத்தில் மூழ்கவும், தம் துன்பமெல்லாம்
அறவே நீங்கவும், தேனின் இனிமை பொருந்திக் கிடந்த சொல்லால் ஆசி
வழங்கினான்.
'வேந்தனும்'
என்றவிடத்து வந்து 'உம்', பாதலத்தோரையும்
சூசையையும் உள்ளடக்கியதாகக் கொள்க.
8 |
மேவி மீயெழு
முன்விரைத் தாமரை
வாவி மீயெழும் வான்கதிர் போன்றரு
டுவி மீயெழச் சூசையை நோக்கியுள்
ளாவி மீயெழு மன்பொடு கூறினான். |
|
மேவி மீ எழு
முன், விரைத் தாமரை
வாவி மீ எழும் வான் கதிர் போன்று, அருள்
தூவி, மீ எழ, சூசையை நோக்கி, உள்
வி மீ எழும் அன்பொடு, கூறினான் : |
தான்
விருப்பத்தோடு மேலே எழுந்து செல்லுமுன், மணமுள்ள
தாமரைத் தடாகத்தின் மேலே எழுந்து நிற்கும் ஞாயிறு போன்று, சூசைமீது
தன் அருளைச் சொரிந்து அவனும் தன்னோடு மேலே எழுந்து வருமாறு,
தன் உள்ளம் நிறைந்து வரும் அன்போடு, திருமகன் சூசையை நோக்கிப்
பின்வருமாறு கூறினான் :
|