பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 791

                திருமகன் வேண்டுகோள்

      - மா, - மா, - - காய், - மா, - மா, - - காய்

 
           17
விண்டிக் கிரிந்த வுருமன்ன
     வீழ்ந்த வஞ்சப் பேய்வினையா
லுண்டிக் கொழுகுங் கனியொன்றா
     லுளதீ தடைத்த வான்வாயில்
மண்டிக் குமுறு மலைகடவழ்
     வைய மளித்த வருட் பயத்தா
லெண்டிக் குறைமன் னுயிர்க்கெல்லா
     மெந்தை யன்றே திறந்திட்டான்
 
விண்திக்கு இரிந்த உரும் அன்ன வீழ்ந்த வஞ்சப் பேய் வினையால்,
உண்டு, இக்கு ஒழுகும் கனி ஒன்றால் உள தீது அடைத்த வான் வாயில்
மண்டிக் குமுறும் அலைகள் தவழ் வையம் அளித்த அருள் பயத்தால்
எண்திக்கு உறை மன் உயிர்க்கு எல்லாம் எந்தை அன்றோ
                                        திறந்திட்டான்.

     வானத்தினின்று பெயர்ந்து விழுந்த இடிபோல வானுலகினின்று
கெட்டு நரகத்தில் விழுந்த வஞ்சகப் பேயின் செயலால், ஆதிப் பெற்றோர்
உண்டு, தேன் ஒழுகும் கணி ஒன்றால் உண்டான பாவம் அடைத்து வைத்த
வானுலக வாயிலை, நம் தந்தையாகிய திருமகன், மண்டி முழங்கும்
அலைகள் தவழும் இவ்வுலகை மீட்டுக் காத்த அருட்செயலின் பயனாக,
எட்டுத் திசையிலும் வாழும் மனிதர்க்கெல்லாம் அன்றே திறந்து வைத்தான்.

 
            18
அடைத்த வாயிற் றிறந்தானை
     யணுகி யணுகு மணங்கெல்லா
முடைத்த வண்ணத் துளத்தெஞ்சா
     வொத்த நெறிநின் றாரல்லாற்
படைத்த திவறிப் படைத்தானைப்
     பகைப்பா ரிங்கண் புகாரென்னாத்
துடைத்த நோய்க்கோர் மருந்தன்னான்
     தொடர்நற் குழுச்சூழ் வரப்புக்கான்.