'எழீஇ'
என்பது 'எழுந்து' என்பதின் சொல்லிசை அளபெடை.
20 |
மன்னா
வின்ப வினையாற்றா
மக்கட்
கிரங்கி மகனானே
னன்னார் வாழ வுயிர்நொந்தே
னயர்ந்தே
னிந்தை பட்டிறந்தேன்
முன்னாட் பிதாநீ பணித்ததெலா
முடித்தேன்
பகைப்பேய் வென்றேன் வென்
றின்னார்க் கொணர்ந்தீங் காண்டுவப்ப
விதோமீட்
டின்றுள் னடிசேர்த்தேன் |
|
"மன்னா இன்ப
வினை ஆற்றா மக்கட்கு இரங்கி மகன் ஆனேன்.
அன்னார் வாழ உயிர் நொந்தேன்; அயர்ந்தேன்; நிந்தை பட்டு
இறந்தேன்.
முன் நாள் பிதாநீ பணித்தது எலாம் முடித்தேன், பகைப் பேய்
வென்றேன்.
வென்று,
இன்னார்க் கொணர்ந்து, ஈங்கு ஆண்டு உவப்ப, இதோ, மீட்டு,
இன்று
உன் அடி சேர்த்தேன். |
நிலையாத
இன்பத்தை நாடிச் செய்த தீவினையைப் போக்க இயலாத
மக்கள் மீது இரக்கங் கொண்டு நானே மனிதன் ஆனேன். அவர்கள்
வாழும் பொருட்டு நான் உயிர் நொந்தேன்; துன்பத்தால் தளர்ந்தேன்,
இகழ்ச்சி கொண்டு இறந்தேன். முன் நாளில் தந்தையாகிய நீ எனக்குக்
கட்டளையிட்டதெல்லாம் முடித்தேன். பகையாகிய பேயை வென்றேன்.
வென்று, இதோ, இவர்களை யெல்லாம் மீட்டுக் கொணர்ந்து, இங்கே
ஆண்டு கொண்டிருந்து மகிழுமாறு, இன்று உன் அடிகளிற் சேர்ந்தேன்.
21 |
நமரென் றிரங்கி
யன்புகமிக
நான்மீட்
டளித்த நரர்குலமே
நுமரென் றிரங்கி யருணோக்காய்
நூறாப்
பழிப்பே யக்குலத்தார் |
|