பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 794

தமரென் றாள்வ தினிநன்றோ
     தயைக்கென் னினத்திற் கிரங்கிப்பே
யமரென் றவர்வென் றீங்கெம்மோ
     டாள வருள்செய் கெனத்தொழுதான்.
 
"நமர் என்று இரங்கி, அன்பு மிக, நான் மீட்டு அளித்த நரர் குலமே
நுமர் என்று, இரங்கி அருள் நோக்காய். நூறாப் பழிப் பேய், அக்
                                   குலத்தார்
தமர் என்று ஆள்வது இனி நன்றே? தயைக்கு என் இனத்திற்கு
                                   இறங்கி, பேய்
அமர் என்று, அவர் வென்று, ஈங்கு எம்மோடு ஆள அருள் செய்க"
                                   எனத் தொழுதான்.

     "நம்மைச் சேர்ந்தவர் என்று இரங்கி, அன்பு மிக, நான் மீட்டுக்
காத்த மனித குலமே, உம்மைச் சேர்ந்தவரென்று கொண்டு, இரங்கி
அருளோடு நோக்குவாய். அழியாத பழி பூண்ட பேய்கள், அக்குலத்தாரைத்
தம்மவர் என்று கொண்டு இனியும் ஆள்வது நல்லதோ? இது பேயின்
போரென்று மதித்து, தயவு கொண்டு என் இனத்தார்க்கு இரங்கி, அவர்
அப்பேயை வென்று, இங்கு வந்து நம்மோடு அரசாள அருள் செய்வாயாக"
என்று கூறித் தொழுதான்.

     நம்மவர் (நமர்) என்றது, ஒரே கடவுளின் மூன்று ஆட்களையும்
ஒருங்கே குறிப்பதாகவும், உம்மவர் (நுமர்) என்றது, இரண்டாம் ஆளாகிய
திருமகனை விலக்கி ஏனைய இருவரையும் குறிப்பதாகவும், என் இனம்
என்றது, அத்திருமகன் மனிதனாகி, மனிதருள் தானும் ஒருவனாக
அமைத்ததாகவும் கொள்க.

 
                  22
களிகூர்ந் தார்வத் தருமகனைக் கனியத் தழுவிக்
                          கண்கடந்த
வொளிகூர்ந் துயர்தன் னாசனத்தி னுகப்பி லருத்தி
                          யோடிருத்தி
யளிகூர்ந் தேதோ வென்மகனே யமைவ கேளென்
                          றவன் கூற
நளிகூர்ந் தாற்றா வருளேந்து நளின நெஞ்சான்
                          மீட்டுரைத்தான்.