பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 795

களி கூர்ந்து, ஆர்வத்து அரு மகனைக் கனியத் தழுவி, கண் கடந்த
ஒளி கூர்ந்து உயர் தன் ஆசனத்தின் உகப்பில் அருத்தியோடு இருத்தி,
அளி கூர்ந்து, "ஏதோ, என் மகனே, அமைவகேள்" என்று, அவன் கூற,
நளி கூர்ந்து, ஆற்றா அருள் ஏந்து நளின நெஞ்சான், மீட்டு உரைத்தான்;

     அத்தந்தையும், மகிழ்ச்சி மிக்கு, தன் அருமை மகனை ஆர்வத்தோடு
கனியத் தழுவி, கண்ணுக்கு அடங்காத ஒளி மிக்கு உயர்ந்து நின்ற தன்
அரியணையில் விருப்பங் கலந்த அன்போடு அமர்வித்து, கருணை மிகுந்து,
"என் மகனே, வேண்டுவன எதுவாயினும் என்னிடம் கேள்" என்று கூற,
குளிர்ச்சி மிகுந்து, தாங்காத கருணை ஏந்திய இனிய நெஞ்சங் கொண்ட
திருமகன், மீண்டும் பின்வருமாறு கூறலானான் :

 
           23
நின்பா லிருந்துன் பணியானா
     னிலப்பா இறங்கும் வேலையிவன்
றன்பா லிருந்து நீதந்த
     தண்டேன் றுளிக்கும் பூங்கொடியின்
மின்பா லிருந்து நிழலொதுங்க
     விரும்பி யரிதா யெனைவளர்த்தா
னுன்பா லிருந்து தொழும்வளன்றா
     னுலகி னிகரா வுளத்தூயோன்.
 
"நின்பால் இருந்து, உன் பணியால் நான் நிலப் பால் இறங்கும் வேலை,
                                              இவன்
தன் பால் இருந்து, நீ தந்த தண் தேன் துளிக்கும் பூங் கொடியின்
மின் பால் இருந்து, நிழல் ஒதுங்க, விரும்பி அரிதாய் எனை வளர்த்தான்.
உன் பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உளத் தூயோன்.