|
"முன்
உன்னிடம் இருந்து, பின் உன் ஏவலால் நான் உலகத்தில்
மனிதனாய் இறங்கிச் சென்ற வேளையில், இவனிடமே தங்கியிருந்து, நீயே
இவனுக்குத் தந்த குளிர்ந்த தேன் சிந்தும் மலர்க்கொடியின் ஒளியினிடையே
இருந்து, இவன் நிழலில் ஒதுங்கிக் கொண்டிருக்க, விருப்பத்தோடு அரிய
தன்மையாய் என்னை வளர்த்தான். இப்பொழுது உன் பக்கம் நின்று
தொழுது கொண்டிருக்கும் இச்சூசையே தான் உலகத்தில் தனக்கு ஒப்பற்ற
மனத்தூய்மை கொண்டவன்.
| 24 |
பூத்தா னரிய
வரமெல்லாம்
புவனத்
தென்றா யுற்றதுயர்
நீத்தான் பிறநா டடைந்தடுங்கோ
னிருபன்
வஞ்சத் தென்னுயிரைக்
காத்தான் பிரியா வன்பியக்கிக்
கலுழ்ந்தான்
கனிநான் சுவையருந்த
வேத்தா னுளைந்தான் வேர்த்துழைத்தா
னெட்டாக்
கருணைக் கரைகண்டான். |
| |
"பூத்தான் அரிய
வரம் எல்லாம்; புவனத்து என் தாய் உற்ற துயர்
நீத்தான்; பிற நாடு அடைந்து, அடும் கோல் நிருபன் வஞ்சத்து என்
உயிரைக்
காத்தான்; பிரியா அன்பு இயக்கி, கலுழ்ந்தான், கனி நான் சுவை
அருந்த
ஏத்தான்; உளைந்தான்; வேர்த்து உழைத்தான், எட்டாக் கருணைக்
கரை
கண்டான். |
"பிறர்க்கு
எட்டாத கருணை என்னும் கடலுக்குக் கரை கண்டவனாகிய
இவன், அரிய வரமெல்லாம் கொண்டிருந்தான்; மண்ணுலகில் என் தாய்
அடைந்த துயரத்தைப் போக்கினான்; வேற்றுநாடு அடைந்து, தன் நாட்டுக்
கொடுங்கோல் மன்னனின் வஞ்சகத்தினின்று என் உயிரைக் காத்தான்;
பிரியாத அன்பினால் தூண்டப் பெற்று, நான் பிரிந்தபோது அழுதான்; நான்
கனிந்த சுவையுள்ள உணவு அருந்தும் பொருட்டுத் தான் இரந்தான்;
வருந்தினான்; வேர்க்க உழைத்தான்.
ஏத்தான்'
என்பது, இரந்தான் எனப் பொருள் படும் 'ஏற்றான்' என்ற
சொல்லின் உலக வழக்கை, எதுகை நோக்கி அமைத்துள்ளார்.
|