பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 798

"இன்னான் இன்ன ததவு உளனாய், என்னோடு உடல் கொண்டு ஈங்கு
                                         அடைந்தான்,
பல்நாள் தொடர்ந்த பழி அற, நான் பாய் செங்குருதி தந்து இறப்ப,
என்னால் ஆய பயன் காட்ட, இவனே மக்கட்கு அரசன் எனா,
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும், ஐயா!" எனப் பணிந்தான்.


     "ஐயா, இவன் இத்தகைய தகுதி உடையவனாய், உடல் கொண்டு
உயிர்த்து என்னோடு இங்கு வந்துடைந்துள்ளான். பல காலமாய்த் தொடர்ந்து
வந்த பாவப் பழி முழுவதும் அழிய, பாயும் செந்நிறமான என் இரத்தத்தைத்
தந்து இறந்திருக்கவே, என்னால் விளைந்த பயன் எத்தகையதென்று காட்ட,
இவனே மனிதர்க்கெல்லாம் அரசனென மதித்து, ஒளி மிக்க மணிகள்
நிறைந்த முடியை இவனுக்குச் சூட்டுதல் வேண்டும்" என்று கூறி
வணங்கினான்.

 
                     27
ஆய்ந்தே யிமிழிற் சொன்னவைகேட் டையன் வான்மேற்
                                    பேருவகை
தோய்ந்தே யெவரு மகிழ்ந்தோயாத் துதிக டுவைப்ப
                                    நன்றென்றான்
வாய்ந்தே மகிழ்ந்து தொழாநின்ற வளனை நோக்கி யாசிநல
மீய்ந்தே மீளா வன்பருளா லெழுகென் றிறுகத் தழுவினனே.
 
ஆய்ந்தே இமிழின் சொன்னவை கேட்டு ஐயன், வான் மேல்
                                    பேர் உவகை
தோய்ந்தே, எவரும் மகிழ்ந்து, ஓயாத் துதிகள் துவைப்ப, "நன்று!"
                                    என்றான்;
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி, ஆசி நலம்
ஈய்ந்தே, மீளா அன்பு அருளால், "எழுக!" என்று இறுகத்
                                    தழுவினனே.

     திருமகன் ஆராய்ந்து இன்பமாய்ச் சொன்னவற்றைத் தந்தையாகிய
ஆண்டவன் கேட்டு, வான் வீட்டில் பெருமகிழ்ச்சி தோய்ந்து, யாவரும்
மகிழ்ந்து, ஓயாத புகழுரைகளை ஒலிபடச் சொல்லிக் கொண்டிருக்க,
"அதுவே நன்று!" என்றான்; இத்தகைய பெருமை வாய்ந்து உவகையுடன்
தொழுது நின்ற சூசையை நோக்கி, தன் நல்லாசியையும் வழங்கி, நீங்காத
அன்போடும் அருளோடும், "நீ இங்கு எழுந்து வருக!" என்று அழைத்து,
இறுக அணைத்துக்கொண்டான்.