பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 799

                 சூசைக்கு முடி புனைவு

     - விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா.

 
              28
வான்புறத் திலகுஞ் செஞ்சுடர் காண
     வந்தென வனைந்தவாண் மகுடந்
தான்புறத் தொருவே றேழ்சுடர் பூண்ட
     தன்மையேழ் மணியொளி யியக்க
மீன்புறத் தகற்றுஞ் செல்வவீட் டுவகை
     மிகவள வின்றியம் முடியைக்
கான்புறத் தலர் கோற் சூசைதன் றலைமேற்
     களிப்பெழ முதலவன் புனைந்தான்.
 
வான் புறத்து இலகும் செஞ்சுடர் காண வந்து என வனைந்த வாள்
                              மகுடம்,
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி
                              இயக்க,
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி,
                              அம்முடியை,
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலைமேல் களிப்பு எழ,
                              முதலவன், புனைந்தான்.

     வானத்தில் விளங்கும் பகலவன் அக்காட்சியைக் காண வந்தது போல்
அமைத்த ஒளியுள்ள மகுடம்; தன் புறத்தே சுற்றிலும் வேறு ஏழு பகலவரைப்
பூண்ட தன்மையாக ஏழு மணிகள் ஒளி பரப்பியிருக்க, விண்மீன்களை
ஒளியற்றனவென்று புறத்தே போக்கும் செல்வச் சிறப்புள்ள மோட்ச வீட்டில்
மகிழ்ச்சி அளவின்றிப் பொங்க, தெய்வ மூன்றாட்களுள் முதலவனாகிய
தந்தையாங் கடவுள், மணத்தைப் புறத்தெல்லாம் பரப்பி மலர்ந்த
மலர்க்கோலைத் தாங்கிய சூசையின் தலைமேல் மகிழ்ச்சியோடு
அம்முடியைச் சூட்டினான்.

 
                    29
ஆர்த்தன தேவ மகிழ்வொலி யரவ மார்த்தன தொடர்துதித்
                                    துழனி
யார்த்தன தேவ வீணைவா யமலை யார்த்தன வினியபா
                                    விசைக
ளார்த்தன பொலிந்த சோபன வகுளி யார்த்தன வதிசய
                                    குமுத
மார்த்தன வுவப்பி லாரொளிமகுட மருந்தவற் கருட்சுதன்
                                    புனைந்தான்.