ஆர்த்தன தேவ
மகிழ்வு ஒலி அரவம்; ஆர்த்தன தொடர் துதித்துழனி;
ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை; ஆர்த்தன இனியபாசைகள்;
ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி, ஆர்த்தன அதிசய குமுதம்;
ஆர்த்தன உவப்பில், ஆர் ஒளி மகுடம் அருந்தவற்கு, அருட் சுதன்,
புனைந்தான். |
தெய்வீக
மகிழ்ச்சி ஒலியின் ஓசைகள் முழங்கின; தொடர்ந்த
துதியின் ஓசைகள் முழங்கின; தெய்வீக வீணையினின்று வரும் ஓசைகள்
முழங்கின; இனிய பாடலின் இசைகள் முழங்கின; பொலிந்த வாழ்த்தின்
ஓசைகள் முழங்கின; வியப்புக் கொண்டவரின் ஓசைகள் முழங்கின;
அவ்வாறு முழங்கிய மகிழ்ச்சியினிடையே, மூவருள் இரண்டாமவனாகிய
திருமகன், ஒளி நிறைந்த மற்றொரு முடியை அரிய தவத்தோனாகிய
சூசைக்குச் சூட்டினான்.
இப்பாடலில்,
அரவம், துழனி, அமலை, இசை, வகுளி, குமுதம் என்ற
பல சொற்கள் ஓசை என்ற ஒரே பொருளில் வந்தது, பொருட் பின்வரு
நிலை என்னும் அணியாகும்.
| 30 |
ஆர்த்தன
பல்லாண் டார்ந்தன வுவகை
யாறறு
நூற்றுமூ வைம்பூச்
சீர்த்தன மதுவிற் பூத்தன சூசை
சேர்த்தகைக்
கொடியிலம் மலராற்
கோர்த்தன வாறா றணிகளே கடவுட்
குளுஞ்சுடர்ப்
பதத்தவை வானோர்
நீர்த்தன வின்பத் தணியமா தவற்கே
நேயனு
மொளிமுடி புனைந்தான். |
| |
ஆர்த்தன பல்லாண்டு;
ஆர்ந்தன உவகை; ஆறு அறுநூற்று மூ ஐம் பூ,
சீர்த்தன மதுவின் பூத்தன, சூசை சேர்த்த கைக் கொடியில். அம் மலரால்
கோர்த்தன ஆறாறு அணிகளே. கடவுட் குளூஞ் சுடர்ப் பதத்து அவை,
வானோர்,
நீர்த்தன இன்பத்து அணிய, மா தவற்கே, நேயனும் ஒளிமுடி
புனைந்தான்.
|
|