பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 814

                 மன்னனுக்குச் சூசை உதவி

      - மா, புளிமா, புளிமா, புளிமா

 
                  50
அயப்போ தலர்வே லியணிந் தழியா
நயப்போ கையிரோ மையினா டினிதாள்
வியப்போ டுவணங் கிகல்வெம் படைவெல்
லெயுப்போல் தெனுநா மவெள்வே லியலான்.
 

அயப் போது அலர் வேலி அணிந்து, அழியா
நயப்பு ஓகை இரோமையின் நாடு இனிது ஆள்,
வியப்போடு வணங்கு இகல் வெம் படை வெல்,
லெயுப்போல்து எனும் நாம வெள் வேல் இயலான்.


     நீர்ப்பூக்கள் மலரும் வயல்கள் சூழக் கொண்டு, அழியாத இன்ப
மகிழ்ச்சி கொண்ட இரோமை என்னும் நாட்டை இனிது ஆள்பவனும்,
வியப்போடு தன்னை வணங்கும் பகைவரின் கொடிய படையை
வெல்பவனும், லெயுப்போல்து என்னும் பெயர் கொண்டவனும்,
வெண்ணிறமான வேலைக் கொண்டவனுமாக ஒருவன் இருந்தான்.

     'ஒருவன் இருந்தான்' என்ற தொடர் வருவித்து உரைக்கப் பட்டது.
'ரோமை' என்பது, 'உரோமை' என அமையற் பாலது, முனிவர் புது
மரபுப்படி, இரோமை என நின்றது.

 
                 51
கோடா துதனித் தகுகோன் மையினான்
வாடா தழறா மரைமா லையினான்
வீடா தநிழற் குடைவே லியினா
னோடா வடறா னையுடைக் கடலான்.
 
கோடாது தனித் தகு கோன்மையினான்;
வாடாது அழல் தாமரை மாலையினான்;
வீடாத நிழற் குடை வேலியினான்;
ஓடா அடல் தானே உடைக் கடலான்.