பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 819

     பொய் கலவாத மாண்பில் உயர்ந்த அம்மன்னன், வஞ்சகம் மாறுமாறு
அன்பு கருதிய சூசை, தன் உடலினின்று பெயரவிருந்த உயிரைக்காத்த
செயலுக்கு, இனி ஒரு பதில் நன்றி காட்டும் தன்மை கருதினான்.

     'மாறிய' என்ற சொல், முதலடியில் 'செய்யிய' என்னும் வாய்பாட்டு
வினையெச்சமாகவும், நான்காமடியில் 'செய்த' என்னும் வாய்பாட்டுப்
பெயரெச்சமாகவும் கொள்க.

 
                      61
ஒல்லென் றுலகெங் கணுமோ லைகள்விட்
டெல்லென் றொளிமே வியதன் குடைக்கீழ்
நல்லென் றுறைநா டர்விளித் தனனால்
செல்லென் றுமுழங் கியதிண் முரசான்.
 

ஒல்லென்று உலகு எங்கணும் ஒலைகள் விட்டு,
எல் என்று ஒளி மேவிய தன் குடைக் கீழ்
நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல்,
செல் என்று முழங்கிய திண் முரசான்.

 

     மேகத்து இடி போன்று முழங்கிய உறுதியான முரசு கொண்ட
அம்மன்னன், தன் ஆட்சிக்கு உட்பட்ட உலகம் முழுவதும் விரைவாக
அறிவிப்பு ஓலைகள் அனுப்பி, பகலவன் போல் ஒளி பொருந்திய தன்
குடையின்கீழ் நல்லவிதமாக வாழும் நாட்டவரையெல்லாம் அழைத்தான்.

 
                     62
கோலைப் பொருவக் கடுகொற் றர்கொண
ரோலைக் கதைகேட் டுணரத் தொழுதே
வேலைப் படைவேந் தரெலா ருமெழீஇக்
காலைக் கடியக் கடிதெய் தினரால்.
 
கோலைப் பொருவக் கடுகு ஒற்றர் கொணர்
ஓலைக் கதை கேட்டு, உணரத் தொழுதே,
வேலைப் படை வேந்தர் எலாரும் எழீஇ,
காலைக் கடியக் கடிது எய்தினர் ஆல்.

     அம்பைப் போல விரைந்து வந்த ஒற்றர் கொணர்ந்த ஓலையில்
அமைந்த செய்தியைக் கேட்டு, கடல் போன்ற படை கொண்ட மன்னர்