|
எல்லோரும் திரண்டெழுந்து,
சூசையின் உதவியை உணர்ந்து தொழுது,
காற்றையும் வெல்லுமாறு விரைந்து வந்து சேர்ந்தனர்.
'எழுந்து'
என்பது 'எழீஇ' எனச் சொல்லிசை அளபெடை ஆயிற்று.
| 63 |
மஞ்சஞ் சுகவன்
னிவிழிக் களிறும்
மஞ்சஞ் சுகமேல் வளர்தே ருநிலா
மஞ்சஞ் சுகவா ளபய ருமுறீஇ
மஞ்சஞ் சுகமாய் வதிநா டதிரும் |
| |
மஞ்சு அஞ்சுக
வன்னி விழிக் களிறும்,
மஞ்சு அஞ்சுக மேல் வளர் தேரும், நிலா
மஞ்சு அஞ்சுக வாள் அபயரும் உறீஇ,
மஞ்சம் சுகமாய் வதி நாடு அதிரும் |
சூளையும்
அஞ்சத் தக்க நெருப்பைத் தம் கண்களிற் கொண்ட
யானைகளும், மேகமும் அஞ்சுமாறு மேலே உயர்ந்து நின்ற தேர்களும்,
நிலாவின் அழகும் அஞ்சத் தக்க வாளைத் தாங்கிய வீரரும் கூடிச்
சேர்ந்தமையால், அன்னங்கள் அழகாயும் சுகமாயும் வாழும் அவ்உரோமை
நாடு அதிர்ந்து முழங்கும்.
இப்பாடலில்,
'மஞ்சு' என்ற சொல் பல பொருள் தந்து நின்றது.
'அஞ்சுக' என்ற சொல், 'அஞ்ச' என்ற சொல்லின் பொருளதாய் முதல்
மூன்றடிகளிலும் நின்றது. இறுதி அடியில் 'மஞ்சம்' என்பது 'மஞ்சுகம்'
என்பதன் திரிபு. மஞ்சு + அம் எனப் பிரித்து, 'மஞ்சு' என்பதை 'மஞ்ஞை'
(மயில்) என்பதன் போலியாகக் கொள்ளலாம்.
| 64 |
கூடார் முகிலார்த்
தனகோ டையெனக்
கூடார் தொழுகோ முரசின் குரலே
கூடார் பறவைக் குலமஞ் சியெழக்
கூடார் படையாற் புவிகூ சினதே |
| |
கூடு ஆர் முகில்
ஆர்த்தன கோடை என,
கூடார் தொழு கோ முரசின் குரலே,
கூடு ஆர் பறவைக் குலம் அஞ்சி எழ,
கூடு ஆர் படையால் புவி கூசினதே. |
|