| 67 |
தண்டா ரினறாச்
சரிதேன் றுளியும்
விண்டா ரையின்வே ழமுகுங் கடமும்
பண்டா வியபாய் வயமாக் குரமே
கொண்டா யதுகட் குவைநீத் தனவே. |
| |
தண் தாரின்
நறாச் சரி தேன் துளியும்,
விண் தாரையின் வேழம் உகும் கடமும்
பண் தாவிய பாய் வய மாக் குரமே
கொண்டு ஆய துகள் குவை நீத்தனவே. |
அணிந்திருந்த
குளிர்ந்த மாலைகளினின்று மணம் பொழியும் தேன்
துளிகளும், வானத்து மழைத் தாரை போல் யானைகள் சொரியும் மதநீரும்
ஒன்றாகச் சேர்ந்து, சேணத்தோடு தாவிப்பாயும் வலிய குதிரைகளின்
குளம்புகள் பதியக் கொண்டு எழுந்த தூசிக் குவியலை அமர்த்தின.
| 68 |
மலைநே ரிரதம்
வளிநேர் பரிவான்
கலைநேர் குடைவான் கனநேர் கரிநீ
ரலை நே ரபய ரடிநேர் தொழுதே
நிலைநேர் வலிநே ரரசண் டினரால். |
| |
மலை நேர் இரதம்,
வளி நேர் பரி, வான்
கலை நேர் குடை, வான் கனம் நேர் கரி, நீர்
அலை நேர் அபயர் அடி நேர் தொழுதே,
நிலை நேர் வலி நேர் அரசு அண்டினர் ஆல். |
மலை
போன்ற தேர்களும், விரைவிற் காற்றையொத்த குதிரைகளும்,
வானத்து நிலவைப் போன்ற குடைகளும், வான் மேகம் போன்ற
யானைகளும் கொண்டு, அலைநீர்க் கடலைப் போன்ற வீரர் அவன் அடியே
நேரே தொழுது, நிலையிலும் வலியிலும் தனக்குத் தானே நிகரான அரசனை
அண்டினர்.
| 69 |
பரிபூட் டியதேர்
பலவே றரசர்
கரிபூட் டியதேர் கடிதோட் டரச
ரெரிபூட் டியதேர் மிசையெய் தரச
ரரிபூட் டியதே ரரசண் டினரால். |
|