|
வானுலகில்
விளங்கிய பகலவனை அணுகி, ஒளி விளங்கும்
விண்மீன்கள் அடிபணிந்ததுபோல, மண்ணுலகின் எல்லா முடி மன்னரும்
வந்து, எட்டுத் திசைகளிலும் நின்று அம்மன்னனைப் போற்றினர்.
| 72 |
அன்னா ரவையா
ரணரா ரவைமெய்
மன்னா ரவைமந் திரிமா ரவைமற்
றொன்னார் தொழு மோங் கயிலோங் கவைசூழ் பொன்னா ரடிபொற் புறநண் ணினரே. |
| |
அன்னார்
அவை, ஆரணர் ஆர் அவை, மெய்
மன்னார் அவை, மந்திரிமார்
அவை, மற்று
ஒன்னார்
தொழும் ஓங்கு அயில் ஓங்கு அவை, சூழ்
பொன்
ஆர் அடி பொற்பு உற நண்ணினரே. |
அம்மன்னர்
கூட்டமும், வேதியர் நிறைந்த கூட்டமும், உடலைச்
சார்ந்து வாழாத முனிவர் கூட்டமும், அமைச்சர் கூட்டமும், மற்றும் பகைவர்
அஞ்சித் தொழும் உயர்ந்த வேல் ஏந்திய வீரர் பெருங் கூட்டமும், அவனது
பொன்னணி நிறைந்த அடி மேலும் அழகுறுமாறு சுற்றிலும் அணுகினர்.
| 73 |
வயிர்செய்
யொலிமற் றொலிமா றியயின்
செயிர்செய் பகைதீர்த் தசிறந் தமுகத்
தயிர்செய் யினிதோ ருரையாய்ந் தறைவா
னுயிர்செய் யமிர்தேந் தியமார் புரியோன். |
| |
வயிர்
செய் ஒலி மற்று ஒலி மாறிய பின்,
செயிர் செய் பகை தீர்த்த
சிறந்த முகத்து,
அயிர் செயிர் இனிது ஓர்
உரை ஆய்ந்து அறைவான்,
உயிர் செய் அமிர்து ஏந்திய
மார்பு உரியோன் : |
ஊதுகொம்பு
எழுப்பும் ஒலியும் மற்ற ஒலிகளும் அமர்ந்த பின்,
உயிரைக் காக்கும் அமுதத்தைத் தாங்கிய மார்புக்கு உரியவனாகிய
அம்மன்னன், பாவம் பயக்கும் பகையைப் போக்கிய சிறந்த முகத்தோடு,
யாவர்க்கும் இன்பம் தரும் இனியதோர் உரையை ஆராய்ந்து கண்டு,
பின்வருமாறு சொல்வான் :
|