|
மன்னவன்
இன்னுரை
தேமா,
தேமா, கூவிளம், தேமா, புளிமாங்காய்
| 74 |
இன்றே யுள்ளோ
ரன்றவர் மாள்வா ரிதுவல்லாற்
பொன்றா ருண்டோ பூதல மெங்கும் புகழ்விஞ்சக்
குன்றா மின்னுங் காசொளி கொண்மா குடிகொண்டே
நின்றா ருள்ளும் பொன்றுயிர் நீங்கா தெவனுண்டோ. |
| |
"இன்றே
உள்ளோர் அன்று மாள்வார்; இது அல்லால்
பொன்றார் உண்டோ பூதலம்
எங்கும்? புகழ் விஞ்ச,
குன்றா மின்னும் காசு ஒளி
கொள் மா முடி கொண்டே
நின்றாருள்ளும், பொன்று உயிர்
நீங்காது எவன் உண்டோ? |
"இன்று
உயிரோடு உள்ளோர் தாமும் மற்றொரு நாள் இறப்பர்; இது
அல்லாமல், உலகமெங்கும் இறவாதவர் உண்டோ? தம் புகழ் மேம்பட,
குறையாது ஒளிரும் பொன்னொளி கொண்ட சிறந்த முடியை அணிந்து கொண்டு நின்ற அரசருள்ளும்,
இறக்கும் தன்மை வாய்ந்த தன் உயிர்
நீங்காது நிலைபெறுவோன் எவனேனும் உண்டோ?
| 75 |
ஒன்னா ரஞ்சும்
வண்சிலை யஞ்சா வுரிநன்னூற்
சொன்னார் சொல்லும் பாவுரை யஞ்சா சுடர்மொய்ப்ப
மின்னார் மன்னர் கோலொளி யஞ்சா விரியாப்பூ
வன்னார் சேடஞ் சாவிளி வென்னா வறியார்யார். |
| |
"ஒன்னார்
அஞ்சும் வண்சிலை அஞ்சா, உரி நல்நூல்
சொன்னார் சொல்லும் பா
உரை அஞ்சா, சுடர் மொய்ப்ப
மின் ஆர் மன்னர் கோல்
ஒளி அஞ்சா, விரியாப் பூ
அன்னார் சேடு அஞ்சா, விளிவு,
என்னா அறியார் யார்? |
"சாவு,
பகைவர் அஞ்சும் வளமான வில்லுக்கும் அஞ்சாது, உரிய
நல்ல நூலை விரித்துச் சொல்லக் கூடியவர் சொல்லும் பாடலின்
சொல்லுக்கும் அஞ்சாது, ஒளி மொய்க்க மின்னல் செறிந்து விளங்கும்
மன்னரது செங்கோல் ஆணைக்கும் அஞ்சாது, விரியாத பருவத்து மலர்
போன்றவர்தம் அழகைக் கண்டும் அஞ்சாது என்ற அறியாதவர் யார்?
|