|
'விளிவு'
பால்பகா அஃறிணைப் பெயர்; இங்கு பலவின்பால் பொருள்
கொண்டது. எனவே 'அஞ்சு' என்ற பலவின்பால் வினைமுற்று ஏற்றது.
| 76 |
மேலார்
கீழார் யாவரு மொன்றாய் விளிவாரேற்
கோலா லோங்காங் காரமு ளத்தே கொளுவானேன்
சேலார் முந்நீர் சூழ்புவி யாண்டே செயிர்மொய்க்கும்
பாலாய்ந் தென்கோ னீக்குத னீங்காப் பயனாமால். |
| |
"மேலோர்
கீழோர் யாவரும் ஒன்றாய் விளிவாரேல்,
கோலால்
ஓங்கு ஆங்காரம் உளத்தே கொளுவான் ஏன்?
சேல் ஆர்
முந்நீர் சூழ் புவி ஆண்டே, செயிர் மொய்க்கும்
பால் ஆய்ந்து,
என் கோல் நீக்குதல் நீங்காப் பயன் ஆம் ஆல் |
"மேலோர்
கீழோர் யாவரும் ஒன்றாய் இறப்பாராயின், ஆட்சிக்
கோலைப் பெற்றுள்ளமையால், உயர்ந்தெழும் அகந்தை உள்ளத்தே
கொள்ளுதல் ஏன்? மீன் நிறைந்த கடல் சூழ்ந்த உலகத்தை ஆண்டு, அதன்
மூலம் குற்றம் வந்து திரளும் தன்மையை ஆராய்ந்து, என் ஆட்சிக் கோலை
விலக்கிக் கொள்ளுதல் எனக்கு நீங்காப் பயனை விளைவிக்கும்.
| 77 |
வீடாச்
செல்வ னோயற வென்றும் விளியாதான்
கோடாக் கோலன் றண்ணருள் மாறாக் குடைவல்லான்
வாடாத் தண்பூ வாகைய ணங்கான் வளரன்பா
னீடா டாத்தன் மைத்தெமை யன்னா னினியாள்வான். |
| |
"வீடாச்
செல்வன், நோய் அற என்றும் விளியாதான்,
கோடாக் கோலன், தண் அருள்
மாறாக் குடை வல்லான்,
வாடாத் தண் பூ வாகை அணங்கான்,
வளர் அன்பான்,
ஈடு ஆடாத் தன்மைத்து எமை,
அன்னான், இனி ஆள்வான். |
"அழியாத
செல்வமுடையவன், நோய் அற்றவனாய் என்றும்
இறவாதவன், வளையாத செங்கோல் உடையவன், குளிர்ச்சியும் கருணையும்
மாறாத குடையை உடையவனாகிய வல்லவன், வாடாத குளிர்ந்த மலர்க்
கொடியின் அழகு வாய்ந்தவன், வளரும் அன்பு பூண்டவன் - அத்தகைய
ஒருவன், ஒப்பற்ற தன்மையாய் நம்மையெல்லாம் இனி ஆள்வான்.
|