| 78 |
அன்னா னென்னா
னென்னவ றைந்தா லருளார்ந்து
மின்னார் விண்ணு மண்ணுமொ ருங்கே வினைதீர்ப்பத்
தன்னா றானாண் டோம்பிநி ழற்றுந் தயையாற்கே
மன்னா நிற்குந் தண்ணிழல் செய்த வளனன்றோ. |
| |
"அன்னான்
என்னான் என்ன அறைந்தால், அருள் ஆர்ந்து,
மின்
ஆர் விண்ணும் மண்ணும் ஒருங்கே, வினை தீர்ப்ப,
தன்னால்
தான் ஆண்டு, ஓம்பி நிழற்றும் தயையாற்கே,
மன்னா
நிற்கும் தண் நிழல் செய்த வளன் அன்றோ? |
"அவன்
யாவன் என்று சொல்வதாயின், மக்களின் பாவம் தீர்க்க
அருள் நிறைந்து, மின்னல் நிறைந்த விண்ணுலகையும் மண்ணுலகையும்
ஒருங்கே தன் வயத்தால் தானே ஆண்டு, மக்களைப் பேணி நிழல் செய்து
காக்கும் தயையுள்ள ஆண்டவனுக்கே, நிலை பெற்று நிற்கும் குளிர்ந்த
நிழலைத் தந்து பேணிய வளன் எனப்படும் சூசையே.
'மன்னா'
என்பது 'செய்யா' என்னும் வாய்பாட்டு உடன்பாட்டு
வினையெச்சம்; 'அன்றோ' அசைநிலை.
| 79 |
நஞ்சிட்
டெஞ்சா வஞ்சனை நல்கும் வினைநீக்கி
யெஞ்சித் துஞ்சா தென்னுயிர் காத்தா னிவனென்னா
மஞ்சிற் கெஞ்சா தாரருள் பெய்த வளமோர்ந்தென்
னெஞ்சிற் றுஞ்சா மின்முடி சூட்ட னினைவுற்றேன். |
| |
|
"நஞ்சு
இட்டு எஞ்சா வஞ்சனை நல்கும் வினை நீக்கி,
எஞ்சித் துஞ்சாது என் உயிர்
காத்தான் இவன் என்னா,
மஞ்சிற்கு எஞ்சாது ஆர்
அருள் பெய்த வளம் ஓர்ந்து, என்
நெஞ்சில், துஞ்சா மின்
முடி சூட்டல், நினைவு உற்றேன்.
|
"எனக்கு
நஞ்சு இட்டுக் கெடாத வஞ்சனை தரும் பகைவர் செயலை
நீக்கி, அதற்கு ஆளாகி இறவாமல் என் உயிரைக் காத்தான் இவனென்று
போற்றி, மேகத்திற்கும் குறைபடாத நிறைந்த அருளையும் எனக்கு வழங்கிய
வளத்தையும் உணர்ந்து, அவனுக்குக் கெடாத மின்னொளி கொண்ட
முடிசூடிப் போற்றுதலை என் நெஞ்சில் நினைத்து முடிவு செய்தேன்.
|