பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 828

                       80
பின்றா தோம்பி நோய்பசி பேராப் பகைபொன்றப்
பொன்றா வன்பா லாண்டெனை யும்மைப் பொலியின்பங்
குன்றா வீட்டுய்ப் பான்மலர் குன்றாக் கொடிக்கோமா
னென்றா னின்றா ருள்ளுரு கப்பேரியல் வல்லான்.
 
"பின்றாது ஓம்பி, நோய் பசி பேரா, பகை பொன்றப்
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை, பொலி இன்பம்
குன்றா வீட்டு உய்ப்பான், மலர் குன்றாக் கொடிக் கோமான்"
என்றான், நின்றார் உள் உருக, பேர் இயல் வல்லான்.

     "மலர் குறையாத கொடியைக் கொண்ட அரசனாகிய அச்சூசை,
தவறாமல் நம்மைப் பேணி, நோயும் பசியும் போக்கி, பகையெல்லாம்
கெடுமாறு கெடாத அன்பால் என்னையும் உம்மையும் ஆண்டு நடத்தி,
சிறப்பான இன்பம் சூறையாத மோட்ச வீட்டிற் கொண்டு சேர்ப்பான்" என்று,
பெருமையோடு கூடிய வலிமை வாய்ந்த அம்மன்னன், கேட்டு நின்றவர்
உள்ளம் உருகுமாறு எடுத்துக் கூறினான்.

               முடிசூட்டு விழா முயற்சி

       - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

 
                      81
உள்ளிய துறவிற் சொன்ன வுரையிதோ வென்ன வஞ்சித்
தெள்ளிய வான்மே லாள்வோன் சென்றெமை யாள னன்றேல்
விள்ளிய கொடியோ னேவும் விடைப்பணி நீதந் தெம்மை
யள்ளிய குறைதீர்த் தாள்வ தமைதியென் றுவப்பி னேர்ந்தார்.
 

உள்ளிய துறவின் சொன்ன உரை இதோ என்ன அஞ்சி,
"தெள்ளிய வான்மேல் ஆள்வோன் சென்று எமை ஆளல் நன்றேல்,
விள்ளிய கொடியோன் ஏவும் விடைப்பணி நீ தந்து, எம்மை
அள்ளிய குறை தீர்த்து ஆள்வது அமைதி" என்று உவப்பின்
நேர்ந்தார்


     மன்னன் தான் துறவு பூணுதலைக் கருதிச் சொன்ன உரையோ
இதுவென்று அரசரெல்லாம் அஞ்சி, "தெளிந்த வானில் நின்று