"வான்
அரச ஆகில், இப் பார் வானுலகு ஆகப் பூண்மின்!
பான்
அரசு ஆகில், கங்குல் பட்டு, ஒளி பரவும் அன்றோ?
கோன்
நர தேவன் ஏவல் கொண்ட வரத்தோன் இங்கண்
தான் நரபதியாய்,
ஒவ்வாத் தயை தளிர்த்து, எம்மை ஆள்வான் |
"அவன்
வானுலக அரசனாய் இருத்தலால், இம்மண்ணுலகை
வானுலகமாகவே அழகு செய்யுங்கள்! பகலவன் அரசனாய் அமைந்தால்,
அங்கு இரவு அழிந்து, ஒளி பரவும் அன்றோ? அரசனாகிய மானிட
இறைவனின் ஏவல் கொண்ட பெரு வரம் படைத்த சூசை தானே இங்கு
மக்களின் அரசனாய், நிகரற்ற தயவு வளர்த்து, நம்மையெல்லாம் ஆள்வான்.
| 86 |
தேவுல குரிய
வண்ணந் திருவிழா வொன்பா னாளிற்
பூவுல கியற்றிப் பின்னாட் பூங்கொடிச் செல்வக் கோமான்
யாவுல கனைத்தும் வாழ யாணர்மா மகுடஞ் சூடல்
மேவுல கெழுக வென்ன வியன்முர சதிர்ப்பச் சொன்னான். |
| |
"தே
உலகு உரிய வண்ணம், திருவிழா ஒன்பான் நாளின்
பூ
உலகு இயற்றி, பின் நாள், பூங் கொடிச் செல்வக் கோமான்,
யா
உலகு அனைத்தும் வாழ, யாணர் மா மகுடம் சூடல்
மேவு உலகு
எழுக!" என்னா, வியல் முரசு அதிர்ப்பச் சொன்னான். |
"தெய்வ
உலகிற்கு ஏற்ற வண்ணம், இப்பூவுலகில் திருவிழா ஒன்பது
நாட்களிலும் நடத்தி, பின் பத்தாம் நாளில், மலர்க்கொடி தாங்கிய செல்வ
மன்னனாகிய சூசை, உலகங்கள் யாவும் ஒன்றாய் நல்வாழ்வு பெறும்
பொருட்டு, புதிய சிறந்த முடியைச் சூடும் பேறு கொண்ட இவ்வுலகம்
எழுச்சி கொள்க என்று, பெரிய முரசும் முழங்க எடுத்துக் கூறினான்.
| 87 |
தார்புனை
முரசின் பேழ்வாய் தழங்குரல் கேட்ட காலை
கார்புனை மனைமூ தூரிற் கதந்தகாற் றதிர்ந்து வீச
நீர்புனை புணரி பொங்கி நெருங்கலை மயங்கிற் றென்ன
நார்புனை யுவப்பில் யாரு நடந்திரிந் தெதிர்ந்தோ யாரே. |
|