நெட்டு
ஒளி மாடத்து உச்சி நேர் இடை விடாது நீலப்
பட்டு
ஒளிப் பந்தர் பாய்த்தி, பத்தியின் பயிற்றிக் கோத்த
கட்டு ஒளி
மணிகள் நாற, கதிர்ப் பகற்கு அஞ்சா மின்மீன்
ிட்டு ஒளி
பூத்த வான் போல் வியென்ன மா நகரம் அன்றே. |
நெடிய
ஒளி பொருந்திய மாளிகையின் உச்சிக்கு நேராக
இடைவிடாமல் நீலப் பட்டு ஒளி செய்யும் பந்தல்கள் அமைத்து,
வரிசையாகப் பரப்பிக் கோத்த மிக்க ஒளியுள்ள மணிகள் விளங்கித்
தோன்ற, கதிர்களைக் கொண்ட கதிரவனுக்கு அஞ்சாமல் ஒளிரும்
விண்மீன்கள் இடைவெளி விட்டு ஒளி விளங்கிய வான் போல் வியென்ன
மாநகரம் தோன்றும்.
'தோன்றும்'
என ஒரு சொல் வருவித்து முடிக்கப்பட்டது.
| 90 |
செம்பொடி
மணியின் றூசி செம்பொனின் றூசி சுண்ணத்
தம்பொடி சிந்து ரத்தோ டயிர்மணல் முத்த மீதிற்
பைம்பொடி யலருஞ் சிந்தப் படர்ந்தவான் புரண்டு மீன்க
டம்பொடி மிதித்த லாகுந் தகுமொளித் தெருவின் றோற்றம். |
| |
செம் பொடி,
மணியின் தூசி, செம் பொனின் தூசி, சுண்ணத்து
அம் பொடி சிந்துரத்தோடு, அயிர் மணல் முத்தம் மீதின்,
பைம் பொடி அலரும் சிந்த, படர்ந்த வான் புரண்டு மீன்கள்
தம் பொடி மிதித்தல் ஆகும், தகும் ஒளித் தெருவின் தோற்றம். |
தகுந்த
ஒளியுடன் விளங்கிய தெருவின் தோற்றம், நுண்மணல்
அளவான முத்துக்களின் மேல், செந்நிறப் பவளப் பொடி, நீல மணியின்
பொடி, செம்பொன்னின் பொடி, நறுமணச் சுண்ணத்தின் அழகிய பொடி,
சிந்துரப் பொடியோடு பசுமையான பொடி போன்ற நுண்ணிய மலர்களையும்
கலந்து சிந்தவே, பரந்த வான் புரண்டு விண்மீன்கள் சிதறி வீழ்ந்த தம்
பொடிகளை மிதித்தற்கு ஒப்பாகும்.
|