பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 834

                           91
தெருத்தொறு மொழுங்கிற் பாய்ந்த திருவொளிப் பளிக்குத்
                                    திண்ணைப்
பருத்தொறும் பசும்பொற் பாவை பவளநீண் குறட்டி லேற்றி
யுருத்தொறு மிரவில் வில்வா யொளிமணித்தீப மின்னக்
கருத்துறு மெல்லைக் கேலாக் கவினகர் கேழ்த்த தன்றே.
 
தெரு தொறும் ஒழுங்கின் பாய்ந்த திரு ஒளிப் பளிங்குத் திண்ணைப்
பரு தொறும் பசும் பொற் பாவை பவள நீண் குறட்டில் ஏற்றி,
உரு தொறும் இரவில் வில் வாய் ஒளி மணித் தீபம் மின்ன,
கருத்து உறும் எல்லைக்கு ஏலாக் கவின் நகர் கேழ்த்தது அன்றே.

     ஒவ்வொரு தெருவிலும் ஒழுங்கோடு அமைந்த அழகிய ஒளியுள்ள
பளிங்காலாகிய பரந்த திண்ணைகள்தோறும் பசும் பொன்னாலாகிய
பொம்மைகளைப் பவளத்தாற் செய்த நீண்ட குறட்டின் மேல் ஏற்றி வைத்து,
அம்பொம்மை உருவம் ஒவ்வொன்றிலும் இரவில் வானவில் போன்ற ஒளி
வீசும் மாணிக்க விளக்குகள் மின்னுதலால், கருத்தின் எல்லைக்குள்
அடங்காத அழகோடு அந்நகர் விளங்கியது.

 
                         92
நகுமணிப் பாவை யாக நங்கயைர் மாலைத் தாமந்
தகுமணி நிரைத்து வாய்த்த சாளரத் தொசிந்து நோக்கத்
தொகுமணிப் பறைக ளார்ப்புஞ் சுட்டகிற் புகையுஞ் சொல்ல
மிகுமணி விழாவைக் காண விண்ணவர் வந்த தொத்தார்.
 
நகும் மணிப் பாவையாக, நங்கையர், மாலை தாமம்
தகு மணி நிரைத்து வாய்த்த சாளரத்து ஒசிந்து நோக்க,
தொகு மணிப் பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல,
மிகு மணி விழாவைக் காண விண்ணவர் வந்தது ஒத்தார்.

     மகளிர், சிரிக்கும் மணிப் பாவை போல, மலர்மாலையும் மணி
மாலையும் தகுந்த பிற மணிகளும் வரிகையாகக் கொண்டமைத்த சன்னல்கள்
வழியாக ஒடுங்கி நோக்கவே, திரண்ட மணிகள் பதித்த பறைகளின்