பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 835

முழக்கமும் சுட்ட அகிலின் புகையும் தமக்குச் சொல்லியதனால், மிக்க
மணிவிழாவைக் காண வானவரே வந்தது போன்று தோன்றினர்.

     கூட்ட + அகில் - 'சுட்டவகில்' எனற் பாலது, தொகுத்தல் விகாரமாய்
'சுட்டகில்' என நின்றது.

 
                        93
இச்செவி மதர்க்கண் கையா லீறில முகந்து மாந்த
மெய்ச்செவி யினிய யாழில் விளையிசை மதுவை மேய்ந்து
கைச்செவி வளைவில் வீசக் களித்தமின் னாடிப் பாடி
யெச்செவி மிக்க தென்ப தீடிலா வியந்து நிற்பார்.
 
இச் செவி மதர்க் கண் கையால் ஈறு இல முகந்து மாந்த,
மெய்ச் செவி இனிய யாழில் விளை இசை மதுவை மேய்ந்து,
கைச் செவி வளை வில் வீச, களித்த மின் ஆடிப் பாடி
எச் செவி மிக்கது என்பது ஈடு இலா வியந்து நிற்பார்.

     இவ்வழகைக் களித்த தம் கண்ணாகிய கையால் முடிவில்லாமல்
முகந்து உண்டு, உடலின் செவியால் இனிய யாழில் பிறக்கும் பாடலாகிய
தேனை உண்டு, தம் கைகளில் அழகிய வளையல்கள் ஒளி வீச, களிப்புற்ற
மின்னல் போல் ஆடிப் பாடி, இவற்றுள் எவ்வழகு சிறந்தது என்பதற்கு ஈடு
காணாதவராய் வியந்து நிற்பர்.

     இரண்டா மடியில் நின்ற 'செவி' செவியென்னும் உறுப்பையும், ஏனைய
மூன்றும் 'செவ்வி' என்ற சொல்லின் இடைக்குறையாக 'அழகு' என்னும் பொருளையும் சுட்டுவதாகக் கொள்க.

                  முடிசூட்டு நிகழ்ச்சி

     - - காய், - - காய், - மா, தேமா, - - காய்

 
                           94
பண்ணிறவாய் வண்டார்க்கும் பனிப்பூ நாறப் படர்மழைமின்
றெண்ணிறவாய்ப் பூம்புகையின் மணிவில் வீசுந் தெருவெல்லாம்
விண்ணிறவாய் மலர்ந்திவ்வா றொன்பா னாளும் விழாவணிகண்
டொண்ணிறவா யிரவியெழீஇ விழைந்த நன்னா ளுதித்ததுவே.