பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 838

                         98
வான்பூத்த சுடர்க்குழவி மான வாய்த்த திருமகவை
மீன்பூத்த பூங்கொடியோ டேந்திக் கண்டார் வினைதீர்ப்பக்
கான்பூத்த வாய்மலர்ந்துட் குளிர்ப்ப நோக்குங் களிமலர்க்கண்
டான்பூத்த தயைதளிர்ப்ப வுயிரா யுட்டங் கினதென்பார்.
 
வான் பூத்த சுடர்க் குழவி மான வாய்த்த திரு மகவை,
மீன் பூத்த பூங் கொடியோடு ஏந்தி, கண்டார், வினை தீர்ப்பக்
கான் பூத்த வாய் மலர்ந்து, உள் குளிர்ப்ப நோக்கும் களி மலர்க்கண்
தான் பூத்த தாயை தளிர்ப்ப, உயிராய் உள் தங்கினது என்பார்.

      அவ்வுருவம், வானத்தில் உதித்த கதிரவன் குழவி போல வாய்த்த
திருமகனை, விண்மீன்போல் பூத்த மலர்க் கொடியோடு. ஏந்திய வண்ணம்,
தன்னை வந்து சந்தித்தவர், தீவினைகளைத் தீர்க்கும் பொருட்டு மணம்
பொருந்திய தன் வாய் சற்றே மலர்ந்து, உள்ளே குளிருமாறு சென்று
நோக்கும் களிப்புள்ள மலர் போன்ற கண் தன்பால் பொருந்திய இரக்கம்
தளிர்க்க, உயிராய் உள்ளே தங்கினது போலும் என்பர்.

 
                   99
விரிமாலைத் தாமத்து விரிபூங் கோலான் மேற்சுடரைச்
சொரிமாலை பூமாலை சுடர்பொன் மாலை துகிர்க்குளுந்தீ
யெரிமாலை மணிமாலை முத்த மாலை யிவையொருங்கோ
ருரிமாலை தலைகூட்டிக் கதிர்நீப் பொப்பப் பரப்பினரே.
 
விரி மாலைத் தாமத்து விரி பூங் கோலான் மேல், சுடரைச்
சொரி மாலை, பூ மாலை சுடர் பொன் மாலை, துகிர்க் குளும் தீ
எரி மாலை, மணி மாலை, முத்த மாலை இவை ஒருங்கு, ஓர்
உரி மாலை தலை கூட்டி, கதிர் நீட்டி ஒப்பப் பரப்பினரே.

     விரிந்த தன்மை கொண்ட மாலை போல் விரிந்த பூங்கொடியைக்
கொண்ட சூசை உருவின் மேல், ஒளியைச் சொரிந்த தன்மையாய்,
பூமாலையும், ஒளிரும் பொன்மாலையும், பவளத்தாலாகிய குளிரும்
நெருப்புப்போல் எரியும் மாலையும், மணிமாலையும், முத்துமாலையுமாகிய
இவற்றையெல்லாம் ஒருங்கே, ஓர் உரிய மாலையாகத் தலைப்பிலே கூட்டி
முடித்து, கதிர்ப் பரப்புப் போல் பரப்பினர்.