மாரியால் புரள்
ஆறு என, மைந்தன் உள்
தாரியால் தகு சால்பு அருள் தன்மை மேல்
வாரியால் புரண்டு, அன்னையும் மல்கு ஒளி
மூரியால் துதி முற்று எடுத்து ஓதினாள்: |
தன்
மகனது உள்ளத்தின் வழியாகச் சிறந்த மாண்பு அருளப்பெற்ற
தன்மை மழையால் கரை புரண்டு ஓடும் ஆறு போல் மேலோங்கி வர,
அன்னையாகிய எலிசபெத்தை அவ்வருள் வெள்ளத்தில் மூழ்கினாள்;
அதனால் பெருகிய ஒளியின் வலிமையால் மரியாள் மீது நிறைவான
வாழ்த்தை எடுத்துக் கூறினாள்:
| 34 |
மக்க
டங்கிய மாசற மைந்தனாய்த்
திக்க டங்கில தேவனைச் சூலொடு
தொக்க டங்கிய தாயிவண் டோன்றவந்
திக்க டங்கில வின்பளிப் பாள்கொலோ. |
| |
''மக்கள் தங்கிய
மாசு அற மைந்தனாய்த்
திக்கு அடங்கில தேவனைச் சூலொடு
தொக்கு அடங்கிய தாய் இவண் தோன்ற வந்து,
இக்கு அடங்கில இன்பு அளிப்பாள்கொலோ! |
''மக்களிடம்
தங்கியுள்ள பாவங்களைப் போக்குமாறு திசையெங்கும்
அடங்காத ஆண்டவனை மகனாகத் தன் கருப்பத்துள் முற்றும் அடக்கிக்
கொண்ட தாய் இங்கு வந்து தோன்றி, எனக்குத் தேனினுள்ளும் அடங்காத
இன்பத்தைத் தர முற்படுவாளோ!
இது
பெரும் பேறு, இதனைப் பெறத் தனக்குத் தகுதியில்லை என்று
வியந்து பாராட்டியது. 'கொலோ'
என்றவிடத்துக் 'கொல்' அசைநிலை.
| 35 |
பிரிந்த
கன்றினை நேடிய பெற்றமோ
வெரிந்த கூழுயி ரென்றியை மாரியோ
சொரிந்த தன்மைவ ரத்தொகை யீகநீ
விரிந்த நீணெறி வந்தெனை மேவினாய். |
|