|
கடல்
எல்லைக்கு அடங்காமல் ஓடுவது போல், வியென்ன மாநகரம்
முழுவதும் திரண்டு வந்து குழுமி நிற்க, வானுலக எல்லைக்கு அடங்காமல்
மேலே வானவர் பல்லாண்டு கூறி வாழ்த்தி நிற்க, வேதக் கலையை
எல்லையறக் கற்று உணர்ந்தோர் தம் வேதக் சடங்குகளை நிகழ்த்திக்
கொண்டிருக்க, மன்னர் மன்னனாகிய லெயுப்போல்து, விலை வரம்பில்லாது
அமைத்த முடியைப் பெருந் தவத்தோனாகிய சூசைக்குத் தொழுத வண்ணம்
சூட்டினான்.
'உறீஇ'
என்பது 'உற்று' என்பதின் சொல்லிசை அளபெடை, 'அலை'
சினையாகு பெயராய்க் கடலை உணர்த்தியது.
வணக்கமும்
இன்பமும்
புளிமா,
கூவிளங்காய், புளிமா, கூவிளங்காய், கருவிளம் புளிமா,
கூவிளங்காய், புளிமா, கூவிளங்காய், கருவிளம்
| 102 |
படிவ ணங்கரச
னடிவ ணங்கவெழ விழமறு
படிவ ணங்கநிமிர் கிளைவ ணங்கவெனை குருசில
ரடிவ ணங்கமறை யவர்வ ணங்கவணி யணிபடை
யவர்வ ணங்கவனை யவர்வ ணங்கவிரை விரிபுகை
முடிவ ணங்கமலர் மழைவ ணங்கவிரி கொடிகுடை
முனர்வ ணங்கமுர சொலிவ ணங்கமுழ வொடுமெனை
துடிவ ணங்கவிசை குழல்வ ணங்கமிசை யமரர்க
டுதிவ ணங்கமுடி விலவ ணங்குமிரு வுலகெலாம். |
| |
படி வணங்கு அரசன்
அடி வணங்க, எழ விழ மறு
படி
வணங்க, நிமிர் கிளை வணங்க, எனை குருசிலர்
அடி வணங்க, மறையவர் வணங்க, அணி அணி படை -
யவர்
வணங்க, அனையவர் வணங்க, விரை விரி புகை
முடி வணங்க, மலர் மழை வணங்க, விரி கொடிகுடை
முனர்
வணங்க, முரசு ஒலி வணங்க, முழவொடும் எனை
துடி வணங்க, இசை குழல் வணங்க, மிசை அமரர்கள்
துதி
வணங்க, முடிவு இல வணங்கும் இரு உலகு எலாம். |
உலகமெல்லாம்
வணங்கும் அம்மன்னன் சூசையின் அடிகளை
வணங்கவும், அவனே எழுந்தும் விழுந்தும் மறுபடி வணங்கவும், பெருகிய
தனது உறவினர் வணங்கவும், எத்தனையோ அரசர் அவ்வாறே சூசையின்
அடியை வணங்கவும், வேதியர் வணங்கவும், அணியணியாகப் படைவீரர்
|