|
வணங்கவும், மற்றும்
அனைவரும் வணங்கவும், மணம் பரவும் புகை எழுந்து
சூசையின் முடியிற் படிந்து வணங்கவும், மலர்கள் மழையாகப் பொழிந்து
வணங்கவும், விரித்த கொடிகளும் குடைகளும் முன்னே நின்று வணங்கவும்,
முரசுகள் ஒலியால் வணங்கவும், பேரிகையும் எத்தனையோ பறைகளும்
முழங்கி வணங்கவும், குழல்கள் இசையால் வணங்கவும், மேலே நின்று
வானவர்கள் துதியால் வணங்கவுமாக, மண்ணுலகு விண்ணுலகென்னும்
இரண்டு உலகங்களிலுமுள்ள எல்லாம் ஒன்று கூடி முடிவின்றி வணங்கும்.
| 103 |
மழைவ ழங்கவிடி
யொலிமு ழங்கனிகர் பலபறை
வயின டங்கலொலி மிகமு ழங்கமுத லவன்மணி
மழைவ ழங்கமுடி யணிய ணிந்தவெனை யவர்நிதி
மழைவ ழங்கநிறை கலைய ணிந்தமறை யவர்துதி
மழைவ ழங்கவிவர் மதும லிந்தநற விடுமலர்
மழைவ ழங்கவவர் புழுகி யைந்துகமழ் பலபுனல்
மழைவ ழங்கவெளி மிசைவ ழங்குமழை மெலிவுற
மணிவ ழங்குநகர் மிசைவ ழங்குநகர் பொருவுமே.
|
| |
மழை வழங்க இடி
ஒலி முழங்கல் நிகர், பல பறை
வயின்
அடங்கல் ஒலி மிக முழங்க, முதலவன் மணி
மழை வழங்க, முடி அணி அணிந்த எனையவர் நிதி
மழை
வழங்க, நிறை கலை அணிந்த மறையவர் துதி
மழை வழங்க, இவர் மது மலிந்த நறவு இடு மலர்
மழை
வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல
புனல் மழை வழங்க, வெளி மிசை வழங்கு மழை மெலிவு உற,
மணி
வழங்கு நகர், மிசை வழங்கு நகர் பொருவுமே. |
மழை
பொழியுங் காலத்து இடியோசை முழங்குதலுக்கு நிகராக, பல
பறைகளும் இடம் அடங்கலும் மிக்க ஒலியோடு முழங்கவும், மூதன்மை
மன்னன் மாணிக்க மழை காணிக்கையாக வழங்கவும், முடியை அழகுடன்
அணிந்த எத்தனையோ பிற மன்னர் செல்வத்தை மழை போல வழங்கவும்,
நிறைந்த வேத நூற் கலையை அறிந்து அணிந்த வேதியர் வாழ்த்து மழை
வழங்கவும், இங்குள்ளோர் தேன் நிறைந்த மணம் பொழியும் மலர் மழை
வழங்கவும், அங்குள்ளோர் புனுகு கலந்து மணங் கமழும் பல வகைப்
பன்னீர் மழை வழங்கவும், வான வெளியில் வழங்கும் மழையும்
|