|
ஒப்பாதலின்றி மெலியுமாறு,
பல வகை மணிகளால் அழகு செய்யப்பட்ட
அவ் வியென்ன மாநகரம், மேலே அமைந்துள்ள மோட்ச நகரத்திற்கு
ஒப்பாக விளங்கும்.
| 104 |
நகவ ளர்ந்தவற
நகம லிந்ததவம் வினையழ
நகமி டைந்ததிரு நகமி ருத்தகொடை மிடியழ
நகவ ளர்ந்தகலை நகவ னந்தமறை வெளிறழ
நகநி வந்தமுயல் நகவி யைந்தபொறை பிணியழ
நகவ ளர்ந்தநய நகவ லர்ந்ததயை பகையழ
நகமு திரிந்தவள நகவு யர்ந்நகளி துயரழ
நகவ ளர்ந்தநரர் நகம கிழ்ந்தமரர் வெறியழ
நகந லங்கணக நகமெ ழுந்ததழ நரகெலாம். |
| |
நக வளர்ந்த
அறம், நக மலிந்த தவம், வினை அழ,
நக
மிடைந்த திரு, நக மிகுந்த கொடை, மிடி அழ,
நக வளர்ந்த கலை, நக அனந்த மறை, வெளிறு அழ,
நக
நிவந்த முயல், நக இயைந்த பொறை, பிணி அழ
நக வளர்ந்த நயம், நக அலர்ந்த தயை, பகை அழ,
நக
முதிர்ந்த வளம், நக உயர்ந்த களி, துயர் அழ,
நக வளர்ந்வ நரர், நக மகிழ்ந்து அமரர், வெறி அழ,
நக
நலங்கள், நக நகம் எழுந்தது, அழ நரகு எலாம். |
வளர்ந்த
அறமும் நிறைந்த தவமும் மகிழவே தீவினை அழவும்,
செறிந்த செல்வமும் மிகுந்த கொடையும் மகிழவே வறுமை அழவும்,
வளர்ந்த கலைகளும் முடிவற்ற வேதமும் மகிழவே அறியாமை அழவும்,
உயர்ந்த முயற்சியும் அமைந்த பொறுமையும் மகிழவே நோய் அழவும்,
வளர்ந்த அன்பும் மலர்ந்த இரக்கமும் மகிழவே பகை அழவும், பெருகிய
வளமும் உயர்ந்த இன்பமும் மகிழவே துயரம் அழவும், இவ்வாறு வளர்ந்த
மனிதரும் அது கண்டு மகிழ்ந்த வானவரும் ஒருங்கு மகிழ்ந்த காரணத்தால்
பேயே அழ, நலங்களெல்லாம் மகிழவும் நரகமெல்லாம் அழவுமாக
இவ்வுலகம் மகிழ்ச்சியால் எழுச்சி கொண்டது.
சொல்லும்
பொருளும் முரண் அணி கொண்டன இப்பாட்டில்.
|