பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 844

நகைய ணிந்தநகர் நனிகு விந்தபய னளவில்
     நவைகொ ணர்ந்தவினை யறவொ ழிந்தகுறை யளவில
தகைய ணிந்தவருள் மிகவ ளர்ந்தநல மளவில
     தவம ணிந்ததிரு வளனு மிழ்ந்தவர மளவிலால்.
 
முகை அணிந்த அணி மது உமிழ்ந்த மணம் அளவு இல.
     முருகு உமிழ்ந்த சுதை கலவை சிந்துரமும் அளவு இல.
புகை அணிந்த மனை தொறும் எழுந்த கொடி அள இல.
     பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு இல.
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு இல.
     நவை கொணர்ந்த வினை அற, ஒழிந்த குறை அளவு இல.
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு இல.
த
     வம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு இல் ஆல்.

     மலர்களால் புனைந்த மாலைகள் தேனோடு பொழிந்த மணத்திற்கும்
அளவு இல்லை. மணம் பொழிந்ந சுண்ணமும் கலவைச் சாந்தும் சிந்துரமும்
அளவுக்குள் இல்லை. நறுமணப் புகை சூழ்ந்த இல்லந்தோறும் உயர்ந்து
நின்ற கொடிகளுக்கும் அளவு இல்லை. ஐம்பொறிகள் நுகர்ந்த
இன்பத்திற்கும் மனம் நுகர்ந்த இன்பத்திற்கும் அளவு இல்லை. மகிழ்ச்சி
புனைந்து நின்ற அந்நகரில் மிகுதியாக வந்து குவிந்த பயன்களுக்கும்
அளவு இல்லை. துன்பத்தைக் கொணர்ந்த தீவினை நீங்கியமையால்,
அறவே ஒழிந்து போன குறைகளுக்கும் அளவு இல்லை. தகுதியாக அணிந்த
தெய்வ அருள் மிகுதலால் வளர்ந்த நலங்களுக்கும் அளவு இல்லை.
தவத்தை அணிந்த திருவளன் சூசை பொழிந்த வரங்களுக்கும் அளவு
இல்லை.

                 தேர்ப் பவனிச் சிறப்பு ...

     விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா

 
                107
சென்மழைக் கொடையா னரசர்கோன் கோயிற்
     சென்றுபுக் கந்தணர்க் காதி
நன்மழை நெய்பா லமுதளித் தெவர்க்கு
     நசையற வான்பொருள் வழங்கி
வின்மழைப் போரின் மீண்டெதிர் பகைவர்
     வெம்படை காண்பது மறுத்தோன்
பொன்மழைக் கொடையா லிடுவெனுஞ் சொல்லிப்
     புவனியிற் கேட்பது மறுத்தான்.