செல் மழைக்
கொடையான் அரசர் கோன், கோவில் சென்று
புக்கு,
அந்தணர்க்கு ஆதி
நல் மழை நெய் பால் அமுது அளித்து, எவர்க்கும் நசை அற
வான்
பொருள் வழங்கி,
வில் மழைப் போரில் மீண்டு எதிர் பகைவர் வெம் படை காண்பது
மறுத்தோன்,
|
பொன்
மழைக் கொடையால், 'இடு' எனும் சொல் இப் புவனியில்
கேட்பது மறுத்தான். மேகம் பொழியும் மழை போன்ற கொடையாளனாகிய
அம் மன்னர் மன்னன், பின் தன் அரசு மாளிகை சென்று புகுந்து, முனிவர்
முதலியோர்க்கு நல்ல மழை போல் நெய்யும் பாலும் கலந்த உணவைப்
படைத்து, இரந்தவர் எவர்க்கும் ஆசை தீர மிகுந்த பொருளை வழங்கி,
வில் மழைபோல, அம்பைப் பொழியும் போரில் மீண்டும் வந்து எதிர்த்த
பகைவரின் சினந்த படை இவ்வுலகிற் காணப்படுவதை முன் மறுத்து ஒழித்த
தான், இப்பொழுது பொன்னை மழையாகப் பொழியும் தன் கொடையால்,
'பிச்சை இடு' என்று இரக்கும் சொல் இவ்வுலகில் கேட்கப்படுதலை மறுத்து
ஒழித்தான்.
'அந்தணர்
ஆதிக்கு' எனற் பாலது, உருபு இடம் மாறி, 'அந்தணர்க்கு
ஆதி' என நின்றது
| 108 |
கைவிளை
கொடையிற் பொழுதெலா மினிதிற்
கடிந்துவெங் கதிர்கடிந் தொளிப்ப
நெய்விளை சுடர்வாய்த் திருமணித் தீப
நிறைந்தொளி மணிகளோ டெறிப்ப
மைவிளை கங்கு னுழைந்திரு ளுலகின்
மல்கின தந்நக ரறியா
மெய்விளை யொற்ற ருரைப்பவீண் டரசன்
விரிமணித் தேரெழ வென்றான். |
|